காதை சுத்தம் செய்ய இயர்பட்ஸ் பயன்படுத்துவது நல்லதா? தெளிவான விளக்கம் இதோ..!!

By Kalai SelviFirst Published May 26, 2023, 7:39 PM IST
Highlights

காதுகளை சுத்தம் செய்ய நாம் அடிக்கடி இயர்பட்ஸ்களைப் பயன்படுத்துகிறோம். இயர்பட்ஸ் பாதுகாப்பானதா என்பதை இப்பதிவில் காணலாம்.

இயர்பட்ஸ் மூலம் காதுகளை சுத்தம் செய்வது பாதுகாப்பானதா?

நம் காதுகளில் குவிந்திருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்வதற்கு அவ்வப்போது இயர்பட்ஸ்களைப் பயன்படுத்துகிறோம்.  காற்று, தூசி, மண் போன்றவை நம் காதுகளில் தேங்குகிறது.  இயர்பட்ஸ்கள் காதை சுத்தம் செய்கின்றன. ஆனால் இவற்றை பயன்படுத்துவதன் மூலம் சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

இயர்பட்ஸ்களால் காதுகளை சுத்தம் செய்ய வேண்டுமா?

காதில் இயர் பட்ஸ் போடும் போது, அது நமக்கு ஒரு அதிர்ச்சி போன்றது. இதன் காரணமாக நம் காதுகளில் வெட்டுக்கள் ஏற்படலாம். மேலும், இயர்பட்ஸ்கள் செவிப்பறைக்கு பாதுகாப்பானவை அல்ல.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் காதுகளையும் சுத்தம் செய்ய இயர்பட்ஸ்களைப் 
பயன்படுத்தக்கூடாது.

பேபி ஆயில் பயன்படுத்தவும்:

காது சுத்தம் செய்ய பேபி ஆயிலைப் பயன்படுத்தலாம்.  இது காதுகளை எளிதாக சுத்தம் செய்கிறது. காதில் 2-3 சொட்டு எண்ணெய் வைத்து, சுத்தமான துணியால் காதை சுத்தம் செய்தால் போதும்.

இதையும் படிங்க: உங்களுக்கு சொரியாசிஸ் இருக்கா? கோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்க இதை பாலோ பண்ணுங்க..!!

குளிக்கும்போது சுத்தம்:

நீங்கள் தினமும் குளிக்கும்போதும் காதை சுத்தம் செய்தால் போதும். வேறு எதையும் பயன்படுத்த வேண்டியதில்லை. இது தவிர, காது மருத்துவரிடம் உங்கள் காதை சுத்தம் செய்வதற்கான சரியான வழி பற்றிய தகவலையும் பெறலாம்.

click me!