
விருதுநகர் மாவட்டம் ஜெகில்பட்டியை சேர்ந்தவர் முத்து செல்வி(38). இவர் தனது கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கு, சிறுவயதிலிருந்தே எவரெஸ்ட் சிகரத்தை ஏற வேண்டும் என்று அவரது கனவாக இருந்தது.
இதனால் அவர் தமிழ்நாடு அரசிடம் நிதி உதவி கேட்டு கோரிக்கை விடுத்தார். அதன்படி, அவரது கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு அவரது பயணத்திற்கு கழக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூபாய் 25 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கியது. அதனைத் தொடர்ந்து தனது பயணித்த தொடங்கிய முத்து செல்வி நேற்று அதிகபட்ச உயரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: கணவர் காசை கண்மூடித்தனமாக இறைக்கும் பெண்.. 1 நாள் ஷாப்பிங் செலவு மட்டும் ரூ.73 லட்சமாம்.. என்னதா வாங்குவார்?
இந்நிலையில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முத்து செல்விக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், " எவரெஸ்ட் உச்சி தொட்டு திரும்பி உள்ள சாதனைப் பெண்மணி திருமிகு. முத்து செல்வி அவர்களுக்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் விளையாட்டு துறை அமைச்சர் உதய உதயநிதி ஸ்டாலினும் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.