Relationship: திருணத்திற்கு பிறகு செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும்? கூச்சப்படாமல் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

By Anu KanFirst Published May 14, 2022, 3:51 PM IST
Highlights

Relationship Tips: திருணத்திற்கு பிறகு, உங்கள் பாலியல் வாழ்க்கை எப்படி இருக்கும் ..? என்பது பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கங்களை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

செக்ஸ் உறவு என்பது ஆண்-பெண் இருவருக்கும் இன்பமான அனுபவத்தை வழங்க வேண்டும். பாலியல் நிபுணர்கள்  இதற்காக 'பாலியல் திருப்தி' என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். ஒருவேளை ஒருவர் அதனைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், செக்ஸ் வாழ்கை இருவருக்கும் இனிமையாக இருக்காது. 

திருணத்திற்கு பிறகு, பாலியல் வாழ்க்கை:

இப்படியான மன பாதுகாப்பின்மைக்கு தீர்வாகவும், பாலியல்  உறவு மேம்பட  திருமணத்திற்கு முன்பே செக்ஸ் உறவு குறித்த புரிதல் இருத்தல் அவசியம். திருணத்திற்கு பிறகு செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி முன்பே அறிந்து வைத்திருத்தல் அவசியம்.

கூந்தல் நீளமாக இருக்க வேண்டுமா..? வயிறு ஒல்லியாக இருக்க வேண்டுமா..?

நெருக்கமான உடலுறவு உங்கள் துணையுடன் இணைந்திருப்பதை உணர உதவுகிறது மற்றும் உங்களுக்குத் திருப்திகரமான அனுபவத்தை அளிக்கிறது. நீங்கள் திருமணத்திற்கு பிறகு, உடலுறவு கொள்ளும்போது, உங்கள் தோற்றத்தைப் பற்றிய எண்ணங்கள் இருக்க வேண்டாம்.உறவின் போது தோற்றம் பற்றிய பொதுவான எண்ணங்கள் வெளியே சென்றுவிடும்.

உடல் எடை அதிகரித்தல்..?


 
இருப்பினும், உடல் எடை அதிகம் உள்ளவர்கள் உடலுறவின்போது தங்கள் துணைக்கு ஏற்றார் போல் அவ்வளவு வளைந்து கொடுக்க முடியாத போது, படுக்கையறையில் ஏமாற்றம் ஏற்பட்டு விடும்  அபாயம் உள்ளது.

உங்கள் இன்பத்தை சிறிய விஷயங்கள் திசை திருப்புமா..?

உடலுறவின் போது நீங்கள் படுக்கையில் இருந்து விழுந்தால் அல்லது சத்தம் எழுப்பினால், அது  சங்கடமாக இருக்கும். ஆனாலும் நீங்கள் இருவருமே வெட்கப்பட மாட்டீர்கள். நீங்கள் ரிலாக்ஸாக உணர்வீர்கள், இருவரும் புன்னைகையுடன் முறுமுறுத்து கொண்டு மீண்டும் பொசிஷனை மாற்றிக்கொண்டு உறவிற்கு திரும்புவீர்கள்.

உடலுறவில் வலி எந்த அளவிற்கு இருக்கும்..?

உடலுறவின் போது நீங்கள் எதிர்பாராத இடங்களில் வலி ஏற்படலாம். இருப்பினும், பொசிசனை மாற்றி கொண்டு முயற்சி செய்யலாம். பெண்களுக்கு உடலுறவு காரணமாக ஏற்படும் வலி, சுகமான அனுபவமாக இருக்கும். எனவே, நீங்கள் வலியை நினைத்து உடலுறவு கொள்ளாமல் இருப்பது இல்லற வாழ்க்கையை இனிமையாக மாற்றாது. என்ன தான் நீங்கள் பாலியல் உறவு இன்றி நண்பர்களாக வாழ முயற்சி செய்தாலும்,நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் கசந்து விடும்.

யார் முதலில் துவங்குவது..? நீயா ? இல்லை நானா..?

செக்ஸ் தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக இருக்கக்கூடாது.  எனவே, இருவருமே தொடங்குவது செக்ஸ் வாழ்வில் கூடுதல் சிறப்பாகும். உடலுறவைத் தொடங்குவதற்கு ஒருவர் மட்டுமே  தொடர்ந்து ஆரம்பிக்கும்போது, உறவு சமநிலையில் இருக்காது. எனவே, இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு  ஈடுபடும்போது, திருப்தி அதிகரிக்கும்.  இல்லறம் சிறக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். 

 மேலும் படிக்க...Sex Secret: உங்கள் செக்ஸ் வாழ்கை செம்மையா இருக்க...இந்த 5 விஷயங்களை மட்டும் மிஸ் பண்ணாதீங்க...


 

click me!