Kitchen Tips: இந்த உணவுப் பொருட்களை ...வீட்டு ஃபிரிட்ஜில் மறந்தும் கூட வைக்காதீர்கள்...!

Anija Kannan   | Asianet News
Published : Mar 23, 2022, 07:50 AM IST
Kitchen Tips: இந்த உணவுப் பொருட்களை ...வீட்டு ஃபிரிட்ஜில் மறந்தும் கூட வைக்காதீர்கள்...!

சுருக்கம்

Kitchen Tips: எந்தெந்த உணவு பொருட்களை வீட்டு ஃபிரிட்ஜில் கண்டிப்பாக வைக்க வேண்டாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

இன்றைய நவீன கால கட்டத்தில் ஃபிரிட்ஜின் பயன்பாடு இல்லாத வீடு குறைவுதான். கிராமங்களிலும், ஃபிரிட்ஜின் பயன்பாடு தற்போது அதிகரித்து காணப்படுகிறது. 

அதுமட்டுமின்றி,  நாம் எதிர்கொண்டு வரும் கொரோனா காலகட்டம், பெரும்பாலானோர் அடிக்கடி வெளியே சென்று காய்கறிகளை வாங்கும் பழக்கத்தை மறக்கடிக்க செய்துள்ளது. இதனால், வீட்டில் இருக்கும் பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள், சமைத்த உணவுப் பொருட்கள் என எல்லாவற்றையும் சேமித்து வைத்துக் கொள்கிறோம். 

ஆனால், எந்தப் பொருள்களை வைக்க வேண்டும், எத்தனை நாள்கள் வரை வைத்திருக்கலாம் என்பதை அறியாமல், அந்தப் பொருளையும் கெடுத்து, அதன் மூலம் நம் உடல்நலனையும் கெடுத்துக் கொள்கிறோம். வீட்டு ஃபிரிட்ஜில் இந்த உணவு பொருட்களை இனி வைக்க வேண்டாம். 

தக்காளி:

தக்காளி இயற்கையில் மென்மையானது மற்றும் இயற்கைக்கு மாறான குளிர்ச்சியான சூழலுக்கு உட்படுத்தப்படும் போது, ​​அது அமைப்புடன் அழிவை ஏற்படுத்தலாம் மற்றும் தக்காளியை மாவாக மாற்றும்.

தேன்:

இயற்கையிலேயே கெட்டுப்போகாத தன்மை கொண்ட தேனும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத ஒரு பொருள்தான்.தேனை ஃபிரிட்ஜில் வைப்பது சர்க்கரையின் படிகமயமாக்கலின் வேகத்தை அதிகரிக்கும், இது கிட்டத்தட்ட மாவு போன்றதாக மாறும், இது வெளியே எடுப்பதை கடினமாக்குகிறது. இதனால், சுவை மாறியும் போய்விடும். ஏறக்குறைய உபயோகிக்க முடியாத அளவுக்கு தேன் மாறிவிடும்.

காபி:

நீங்கள் காபியை ஏர்-டைட் கன்டெய்னரில் சேமிக்கவில்லை என்றால், அது கடினமான கட்டிகளாக மாறும். மேலும் ஃபிரிட்ஜில் வைக்கும்போது, அது மற்ற உணவு பொருட்களின் வாசனையையும் உறிஞ்சத் தொடங்கும், இதனால், அதன் அசல் காஃபின் சுவையை இழந்துவிடும்.

மூலிகைகள்:

மூலிகைகளையும் கீரைகளையும் ஃபிரிட்ஜில் வைத்து வீணடிக்கக் கூடாது, ஏனென்றால், அவற்றின் சத்துகள் குறைந்துபோய்விடும். சாதாரணச் சூழலில், நீர் நிறைந்த பாத்திரத்தில் இவற்றின் தண்டுப் பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்திருந்தாலே போதும், தளதளவென்று உலர்ந்து போகாமல் இருக்கும்.

பூண்டு:

பூண்டின் ஆயுட்காலம் 10 முதல் 12 நாட்கள் வரை இருக்கும், அதையும் தாண்டி அதன் ஊட்டச்சத்து அளவை இழக்கிறது. இருப்பினும், பூண்டின் வலுவான வாசனை கிட்டத்தட்ட ஒவ்வொரு உணவையும் ஒன்றிணைக்கும் போக்கைக் கொண்டுள்ளது, எனவே வெளியில் சேமிப்பது நல்லது.

வெங்காயம்:

ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாதது வெங்காயம். குளிரில் தானும் கெட்டு ஃபிரிட்ஜையும் கெட்ட நாற்றம் உள்ளதாக மாற்றிவிடும். மேலும், ஃபிரிட்ஜில் இருக்கும் எல்லா உணவுகளையும் வெங்காய மணம் மணக்கும்படி மாற்றிவிடும். 

 மேலும் படிக்க...Summer season: கோடைக்கு இதமான தேங்காய் பால் -வெந்தய கஞ்சி....நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண்களை ஆற்றும்...!

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Weight Loss Without Workout : உடற்பயிற்சி இல்லாமல் 'எடையை' கட்டுக்குள் வைக்க 'இப்படியும்' செய்யலாம்! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க