Today astrology: குபேரனின் சிறப்பு அருள் பெறப்போகும் 7 ராசிகள்..பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!இன்றைய ராசி பலன்

Anija Kannan   | Asianet News
Published : Mar 23, 2022, 06:08 AM IST
Today astrology: குபேரனின் சிறப்பு அருள் பெறப்போகும் 7 ராசிகள்..பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!இன்றைய ராசி பலன்

சுருக்கம்

Today astrology: செல்வத்தின் அதிபதியான குபேரனின் சிறப்பு அருள் பெறப்போகும் 7 ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

குபேரனின் பொம்மையை எப்போதும் வீட்டில் வைத்திருக்கும் போது, செல்வம் அதிகரிக்கும். மேலும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி குடும்பத்தில் எப்போதும் மகழ்ச்சி நிலவும். மன அழுத்தம் குறையும்.. சந்தோஷமான வாழ்க்கைக்கு வாழ வழிவகை ஏற்படுத்திக்கொடுக்கும் என்பது ஐதீகம்.

குபேரரை பார்க்கும்போது எப்போதும் ஒரு விதமான சிரிப்பு நம் மனதிற்குள் இருந்துக்கொண்டே இருக்குமாம். அப்படியான, குபேரக் கடவுளின் அருள் இந்த 7 ராசிகளுக்கு இன்று நேரடியாக கிடைக்க போகிறது. 

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளன. அதன்படி, செல்வத்தின் கடவுளான குபேரக் கடவுளின் சிறப்பு அருள் சில ராசிகளுக்கு மட்டுமே அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பார்ட் அடிக்க போகிறது.  யார் அந்த 7 ராசிகள் என்பதை தெரிந்து கொள்வோம். 

மேஷம்:

வீட்டில் செல்வம் பெருகும். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

கடகம்:

இந்த ராசிக்காரர்கள் புத்தி கூர்மை மிக்கவர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். இந்த ராசிக்காரர்கள் சம்பாதிப்பதிலும், பணம் சேர்ப்பதிலும் மற்றவர்களை விட முன்னிலையில் உள்ளனர்.

துலாம்:

இந்த ராசிக்காரர்கள் செல்வத்தின் கடவுளான குபேரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் பணம் சம்பாதிப்பதில் வல்லுனர்களாகவும் கருதப்படுகிறார்கள். இவர்களிடம் செல்வத்திற்கு குறை இருக்காது. குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். உங்களது செயல்கள்  மூலம் மதிப்பு கூடும்.

தனுசு:

இன்று உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரித்து காணப்படும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும். இதுவரை தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக அமையும். உல்லாச பயணங்களும் செல்ல நேரலாம்.  

விருச்சிகம்:

இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். இவர்களுக்கு அதிர்ஷ்டமும் மிகவும் நன்றாக வேலை செய்யும். இதனால் இந்த ராசிக்காரர்கள் பொதுவாக எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவார்கள்.

 மகரம்:

இந்த ராசிக்காரர் அதிர்ஷ்டத்தில் பணக்காரராக இருப்பார்கள். லட்சுமி தேவி மற்றும் செல்வத்தின் கடவுளான குபேரின் சிறப்பு அருள் இவர்களுக்கு அதிகம் இருக்கும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும்.

மீனம்:

குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். கடின உழைப்பு இவர்களிடத்தில் இருக்கும் என்பதால், அதிர்ஷடமும் அதிகமாக கைகொடுக்கும். இதனால் எளிதில் எதிலும் வெற்றி பெறுவார்கள். 

மேலும் படிக்க...Today astrology: கும்ப ராசியில் சுக்கிரன்...இந்த 5 ராசிகளுக்கு தொழில்,வாழ்கையில் மகிழ்ச்சி! இன்றைய ராசி பலன்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்