Today astrology: கும்ப ராசியில் சுக்கிரன்...இந்த 5 ராசிகளுக்கு தொழில்,வாழ்கையில் மகிழ்ச்சி! இன்றைய ராசி பலன்!

By Anu Kan  |  First Published Mar 22, 2022, 8:22 AM IST

Today astrology: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசிகளிலும், பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், இது சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சிலருக்கு கவலையை ஏற்படுத்தும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


ஜோதிடத்தின் படி, கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசிகளிலும், பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், இது சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சிலருக்கு கவலையை ஏற்படுத்தும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரன் கும்ப ராசியில் பிரவேசம்: 

Tap to resize

Latest Videos

undefined

ஜோதிட சாஸ்திரத்தில், மார்ச் 31ம் தேதி காலை 8:54 மணிக்கு,  சுக்கிரன் கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். மகிழ்ச்சி, செல்வம், வளம், ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றுக்கு முக்கிய காரணியாக விளங்கும் சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

நீதியின் கடவுளான சனி பகவான், கும்ப ராசியின் அதிபதியாக கருதப்படுகிறார். சனி பகவான் தனது அருளை பொழிய தொடங்கி விட்டால், நிறுத்தவே மாட்டார். ஆகையால், சுக்கிரனின் இந்த ராசி மாற்றம், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் 11வது வீட்டில் இருக்கும். 11வது வீடு வருமானத்தை குறிப்பதாக கருதப்படுகிறது. பெயர்ச்சி காலத்தில் நிதி ஆதாயம் நன்றாக இருக்கும். பல வருமான ஆதாரங்கள் இருக்கும். வியாபாரத்தில் லாபம் வேகமாக அதிகரிக்கும்.தேர்வு முடிவில் திருப்தி அடைவீர்கள். கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருவார். உங்கள் பலமும் அதிகரிக்கும். 

கும்பம்:

கும்ப ராசியினருக்கு, சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். செல்வத்திற்குக் காரணமான சுக்கிரன் சஞ்சாரம் இந்த ராசியில்தான் நுழையப்போகிறார். பெயர்ச்சி காலத்தின் போது அதிர்ஷ்ட காற்று வீசும்.  இந்த நேரத்தில், வேலை செய்யும் நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வாழ்வில் நன்மைகளும் கிடைக்கும்.

மகரம்:

உங்களது ராசிக்கு, சுக்கிரன் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜோதிடத்தில், இரண்டாவது வீடு பணம் மற்றும் மகிழ்ச்சி என்று கூறப்படுகிறது. உங்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் பணியிடத்தில்  பாராட்டுகளை உருவாக்கும். வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. கும்பத்தை ஆளும் கிரகம் சனி. சனி மற்றும் சுக்கிரன் இடையே நட்பு உணர்வு உருவாகும். இது உங்கள் வாழ்வில் அதிஷ்டம் கொடுக்கும். 

விருச்சிகம்: 

உங்களது ராசிக்கு, சுக்கிரன் 12 ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்கள் பணியிடத்தில் பிரச்சனைகள் அல்லது தடைகள் எதுவாக இருந்தாலும், இப்போது நீங்கள் படிப்படியாக அதிலிருந்து விடுபடுவீர்கள், முன்னேற்றத்தின் பாதை திறக்கும். குழந்தைகள் மற்றும் குடும்பத்தைப் பற்றி நீங்கள் நன்றாக சிந்திக்க முடியும். குழந்தைகளின் கல்வி குறித்து சிறப்பாக சிந்திக்கலாம்.

தனுசு: 

உங்களது ராசிக்கு, சுக்கிரன் 5ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்கள் மற்றும் கூட்டாளிகளிடமிருந்து தேவையான ஆதரவைப் பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். திருமணம் நடக்க வாய்ப்புகள் உண்டு. வீட்டின் பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். 

மேலும் படிக்க...Today astrology: ஏப்ரல் 12 வரை குருவின் அருள்....இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பார்ட்...இன்றைய ராசி பலன்..!


 

click me!