Stealth omicron: 'ஸ்டெல்த் ஒமிக்ரான்' பாதிப்பினால், உலகம் முழுவதும் கோவிட் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளது.
சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா என்கிற கொடிய நோய், டெல்டா, டெல்டா பிளஸ், என்று ஒமிக்ரான் என்று பல்வேறு விதங்களில் உருமாறி, உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பல உயிர்களைக் காவு வங்கியது. இதையடுத்து, கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையான ஒமிக்ரான் பரவ துவங்கியது.
undefined
இதையடுத்து, கடந்த பிப்ரவரி தொடங்கியதிலிருந்து ஒமிக்ரான் தொற்று மெல்ல மெல்ல குறைய தொடங்கியது.இதனால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு தங்கள் பணிகளை தொடர்ந்து, பொருளாதாரத்தை மீட்டெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டின் துணை மாறுபாடான, (ஸ்டெல்த் ஒமிக்ரான்) உலக அளவில் தலை தூக்க துவங்கியுள்ளது. இதனால், உலகம் முழுவதும் கோவிட் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளது.
இந்தியாவிலும் நான்காவது அலை வருமா..?
தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் துணை திரிபான (ஸ்டெல்த் ஒமிக்ரான்) பிஏ2 என்ற வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால், சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட இந்திய மக்களுக்கு அடுத்த அலை, ஏற்படுவதற்கான எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் ஜூன் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 வரை நாயகம் அலை தொடரும் என்கின்றனர் வல்லுநர்கள்.
WHO எச்சரிக்கை:
ஸ்டெல்த் ஓமிக்ரான் ஒமிக்ரான் மாறுபாட்டை விட கடுமையானது என்பதை உறுதிப்படுத்த அதிக தரவு இல்லை என்றாலும், ஒமிக்ரான் வகை மிகவும் வேகமால பரவக்கூடியது என்று WHO எச்சரித்துள்ளது.
ஸ்டீல்த் ஒமிக்ரான் மாறுபாடு முதலில் மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. இருப்பினும், டெல்டாவைப் போலவே, BA.2 மாறுபாடு நுரையீரலைப் பாதிக்காது. இருப்பினும், இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூச்சுத் திணறல், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவை ஏற்படுவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
ஓமிக்ரான் மற்றும் 'ஸ்டீல்த் ஓமிக்ரான் வேறுபாடு என்ன..?
ஸ்டீல்த் ஒமிக்ரான் என்பது, இந்தியாவில் கோவிட்-19 இன் மூன்றாவது அலைக்கு பின்னால் இருந்த, மிக வேகமாக பரவி வந்த ஒமிக்ரானின் துணை மாறுபாடு ஆகும். இது BA.2 என்று பெயரிப்படுகிறது.
ஒமிக்ரானை விட 1.5 மடங்கு 'ஸ்டீல்த் ஒமிக்ரான்' அதிகமாக பரவும் தொற்றுநோயாக இருக்கலாம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நோயை கண்டறிவது எப்படி..?
ஸ்டீல்த் ஒமிக்ரான், கோவிட் வைரஸின் ஒமிக்ரான் பதிப்பின் இரண்டு துணை வகைகளை BA.1 மற்றும் BA.2 என்று ஒருங்கிணைக்கிறது. ஸ்டீல்த் ஒமிக்ரான் மாறுபாட்டை PCR பரிசோதனைகள் மூலம் கண்டறிவது கடினம். ஏனென்றால், புதிய மாறுபாடு ஸ்பைக் புரதத்தில் உள்ள முக்கிய பிறழ்வுகளைத் தவறவிடுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.