Brown and white eggs: முட்டைகள் உலக அளவில் அதிக மக்களால் சாப்பிடப்படும் காலை உணவாக இருக்கிறது. அசைவம் சாப்பிட முடியாமல் வசதி குறைவாக உள்ள ஏழை எளிய மக்களுக்கு கிடைத்திருக்கு ஒரே அசைவ உணவு முட்டை.
முட்டைகள் உலக அளவில் அதிக மக்களால் சாப்பிட படும் உணவாக இருக்கிறது. அசைவம் சாப்பிட முடியாமல் வசதி குறைவாக உள்ள ஏழை எளிய மக்களுக்கு கிடைத்திருக்கு ஒரே அசைவ உணவு முட்டை. ஏழைகள் மட்டுமில்லாமல் அனைவராலும் விரும்பப்படும் இந்த முட்டையில், சிலர் வித்தியாசம் காண்கின்றனர். சிலர் பிரவுன் முட்டை நல்லது என்கின்றனர். ஒரு சிலர் வெள்ளை முட்டை சிறந்தது என்கின்றனர், ஆனால், மருத்துவர்கள் சொல்லும் உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
குறிப்பாக, பிரவுன் முட்டை வெள்ளை முட்டையை விட விலை அதிகமானது. இதை வைத்து நல்லது. கெட்டது பார்க்கப்படுகிறதா என்பதை பற்றி தெறித்து கொள்ளுங்கள்.
பிரவுன் முட்டையில் ஆர்கானிக் நிறைந்துள்ளதா..?
இரண்டு முட்டைகளுக்கும் ஓட்டின் நிறத்தில் வேறுபாடு இருக்கும். அதேபோன்று, பிரவுன் முட்டையின் மஞ்சள் கரு நிறத்தில் அடர்த்தியாக இருக்கும், இதற்குக் காரணம் இந்த முட்டையில் இருக்கும் நிறமி தான். ஆனால், உண்மை என்னவெனில் இந்த முட்டைகள் தரும் சத்துகளை ஒப்பிட்டுப் பார்த்தால், கிட்டத்தட்ட இரண்டுமே சம அளவில் சத்துகளைத் தருகிறது.
இரண்டு முட்டைகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம், அதன் சுவை மட்டுமே. எந்த கோழி இனத்தின் முட்டை அது என்ற அடிப்படையில் தான் முட்டைகளின் நிறங்கள் நிர்ணயம் ஆகின்றன. பிரவுன் முட்டைகளை இடும் கோழிகளுக்குப் பொதுவாக சற்று தரம் உயர்ந்த தீனிகள் தரப்படுகின்றன. ஆதலால், தான் இந்த விலை சற்று அதிகமாக உள்ளது. அனைத்துக் கோழிகளுக்கும் அதே தீனி கொடுக்கப்படும்போது, இந்த சுவை வித்தியாசம் கூட முட்டைகளில் இருக்காது. பிரவுன் முட்டையில் ஆர்கானிக் நிறைத்துள்ளது என்பது உண்மை தன்மை இல்லை.
முட்டையில் நிறைந்துள்ள நன்மைகள்:
1. முட்டையில் லுடீன் என்ற மூல பொருட்கள் அதிக அளவு நிறைந்துள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.
2. ஓமேகா 3 முட்டையில் அதிகம் இருப்பதால் இதய பிரச்சனைகள் வராமல் காக்கிறது. எலும்புகளுக்கு முட்டை வலிமையை தரும்.
3. உடல் உழைப்பு அதிகம் செய்யாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது சிறந்த ஒன்று. ஏனெனில் அதிகப்படியான முட்டை சாப்பிடுதல் என்பது அவர்களுக்கு அதிக கொழுப்பை உண்டாக்கும்.
4. அதேபோன்று, சுகர், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முட்டை மிக சிறந்த ஒரு உணவுப்பொருள் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.