Summer season: கோடைக்கு இதமான தேங்காய் பால் -வெந்தய கஞ்சி....நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண்களை ஆற்றும்...!

Anija Kannan   | Asianet News
Published : Mar 23, 2022, 07:00 AM IST
Summer season: கோடைக்கு இதமான தேங்காய் பால் -வெந்தய கஞ்சி....நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண்களை ஆற்றும்...!

சுருக்கம்

Summer season: வெயில் காலத்தில் வரும் நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண்களை சரி செய்யும் தேங்காய் பால்-வெந்தய கஞ்சி ரெசிபி செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெயில் காலத்தில் வரும் நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண்களை சரி செய்யும் தேங்காய் பால்-வெந்தய கஞ்சி ரெசிபி செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெயில் காலம் வந்துவிட்டாலே, சூரியனில் தாக்கம் நம்மை சுட்டெரிக்க ஆரம்பித்துவிடும். இந்த ஆண்டு, ஆரம்ப நேரத்திலேயே வெயில் கொடுமை அதிகமாகவே இருக்கிறது. அந்த சமயம் அடிக்கடி பசி இன்மையும், அதிக தண்ணீர் தாகம் ஏற்படுவதையும், நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் உடல் சூடும் அதிகரித்திருக்கும். சிலருக்கும், உதட்டில் வெடிப்பு, அல்சர், புண்கள் நாக்கு வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். காரமான உணவுகளை உட்கொள்வது இந்த நேரத்தில் கூடுதல், பாதிப்பை தரலாம்.

எனவே, கோடை காலத்தில் நம்முடை உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவது அவசியம். அதேபோன்று, நாம் மாற்றம் கொண்டு வரும் உணவு  ஊட்டச்சத்து அதிகம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். அப்படியான நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண்களை சரி செய்யும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கூடிய தேங்காய் பால், வெந்தய கஞ்சி ரெசிபி செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருள்கள்:

தேங்காய்ப் பால் - 2 கப்

அரிசி -  1/2  கப்

வெந்தயம் - 1 ஸ்பூன்

செய்முறை:

அரிசியை நன்றாகக் கழுவி விட்டு,அரிசியுடன் சேர்த்து வெந்தயத்தையும் 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

பின்பு குக்கரை எடுத்து, அவற்றில் அரிசி மற்றும் வெந்தயத்தை சேர்த்து,  அதில் அரிசி எடுத்த அதே கப்பில் ஒன்றரை கப் அளவிற்குத் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். (பின் குறிப்பு: சாதம் வடிப்பதற்கு சேர்த்து போன்று) நான்கு அல்லது ஐந்து விசில் விட்டு சாதத்தை நன்கு குழையும் வரை வேக விட வேண்டும்.

பிறகு, ஐந்து ள்ளது பத்து நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து அதில் சிறிது மட்டும் உப்பு சேர்த்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்காய்ப் பாலை சேர்த்து மசித்து விடவும். பிறகு, 5 நிமிடங்களில் தேங்காய்ப் பாலை சாதம் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி விடும். 

இறுதியில், சுவையான தேங்காய்ப்பால், வெந்தயக் கஞ்சி தயார். இதை எடுத்து காலை உணவாக அனைவருக்கும் பரிமாற வேண்டும். 

 தேங்காய்ப்பால்-வெந்தயக் கஞ்சி பயன்கள்:

தேங்காய்ப்பால், அல்சர், வயிற்றுப் புண், வாய்ப்புண் போன்ற பிரச்சனையை சரி செய்ய, வெறும் வயிற்றில் ஒரு வாரத்துக்கு எடுத்துக் கொள்வது சிறந்தது. அதேபோன்று, வெந்தயம் அஜீரணக் கோளாறு, நெஞ்சு எரிச்சல் கெட்ட கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்த  உதவுகிறது.

வெந்தயத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவு என்றால் அது வெந்தயம் தான். 

எனவே, பல்வேறு பயன்பாடுகள் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் இந்த தேங்காய்ப்பால் -வெந்தயக் கஞ்சி காலை உணவாக சாப்பிடலாம். 

மேலும் படிக்க...Today astrology: குபேரனின் சிறப்பு அருள் பெறப்போகும் 7 ராசிகள்..பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!இன்றைய ராசி பலன்..!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்