கேரளாவில் முதல் என்ட்ரி..! சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவனுக்கு கரோனா வைரஸ் உறுதியானது..! பீதியில் மக்கள்..!

By ezhil mozhiFirst Published Jan 30, 2020, 2:00 PM IST
Highlights

மூர்த்தி என்ற தாழ்மையான மனிதராக இருப்பதால், வணிக அதிபருக்கு மரியாதை செலுத்துவதற்கான சைகையாக டாடாவின் கால்களைத் தொட அவர் குனிந்தார்.

கேரளாவில் முதல் என்ட்ரி..! சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவனுக்கு கரோனா வைரஸ்  உறுதியானது..! பீதியில் மக்கள்..!  

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தாக்கம் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள கரோனா வைரஸ் சீனாவில் ஹுவாங் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் காற்றின் மூலமாகவும் தொற்றின் காரணமாகவும் மிக எளிதாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவி தற்போது பல்லாயிரக்கணக்கானோருக்கு கரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக உலக நாடுகளே அஞ்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இதற்கிடையில் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பயணிகள் வந்தால் அவர்களை விமான நிலையத்திலேயே தீவிர பரிசோதனை செய்த பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள்.மேலும் சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கிறார்கள்.


 
இந்த நிலையில் தற்போது, இந்தியாவிலும் சீனாவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி கேரளாவில் 800 க்கும் அதிகமானோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஒரு நிலையில் தற்போது சீனாவில் இருந்து கேரளா திரும்பிய ஒரு மாணவருக்கு கரோனோநோய் வைரஸ் தாக்குதல் இருப்பதை சோதனையின் மூலம் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்தியாவில் கரோனா வைரஸால் தாக்கப்பட்ட நபரை கண்டறிவதில் இவரே முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!