காம உணர்வு வரக்கூடாது, செக்ஸ் வைத்துக் கொள்ள கூடாது! விதவைகளின் சோக வாழ்க்கை!

By vinoth kumarFirst Published Sep 27, 2018, 3:17 PM IST
Highlights

கணவனை இழப்பது மட்டுமன்றி இந்தியாவில் விதவையாக வாழ்வதே வேதனையானதுதான். ஆண்களுக்கு மறுக்கப்படாத மறுமணம் பெண்களுக்கு எட்டாக்கனிதான்.

கணவனை இழப்பது மட்டுமன்றி இந்தியாவில் விதவையாக வாழ்வதே வேதனையானதுதான். ஆண்களுக்கு மறுக்கப்படாத மறுமணம் பெண்களுக்கு எட்டாக்கனிதான். சமூக மாற்றம் என்பது பேச்சளவில்தான் உள்ளதற்கு சாட்சியாக உள்ள அம்சங்களில் விதவைகள் விவகாரமும் ஒன்று, கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வதை தவறான கண்ணோட்டத்தில் காண்பது நீடித்துத்தான் வருகிறது. இந்தியாவில் பல இடங்களில் விதவை பெண்கள் சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் அவதிகளையும் கொடுமைகளையும் சந்திப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.

பகுத்தறிவு மாநிலமான தமிழகத்தில் வழக்கம் குறைந்து காணப்பட்டாலும் பல மாநிலங்களில், கணவனை இழந்த பெண்களுக்கு வெள்ளை புடவை தான் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேறு சில இடங்களில் கணவனை இழந்த பெண்களை ஒதுக்கிவைக்கப்படுகின்றனர். சிலர் ஆசிரமங்களில் சேர்க்கப்படுகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவன் நகரம் உட்பட வட இந்தியாவில் விதவை பெண்களுக்கு என்றே ஆசிரமங்கள் உள்ளன. 

கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கம் உள்ளது. தாலி, குங்குமம், நகை மட்டுமன்றி கூந்தலே வளர்க்கக் கூடாது என விதிக்கும் கொடுமையும் நிகழ்கிறது. சில பகுதிகளில் விதவை பெண்கள் காம உணர்வுக்கு ஆட்படாமல் இருக்க மசாலா, வெங்காயம், பூண்டு உள்ளிட்ட சில வகை உணவுகளை சேர்த்துக்கொள்ளவும் மத கோட்பாடு என்ற என்ற பெயரில் தடை விதிக்கப்படுகிறது. விருந்தாவனில அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிறைவாசம் போன்ற வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். பிறரைப் போல அனைவரிடமும் இயல்பாக பேச முடியாது. யாரையும் சந்திக்க முடியாது

இன்னும் இப்படியான வாழ்க்கை முறை இருக்கிறதா என வியப்பையும் கடந்து இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் தான் இருக்கிறது, முழுமையாக வளர வில்லை என்பதற்கு இவை உதாரணமாக உள்ளன. மேலும் விதவை பெண்கள் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள கூடாது என்பதற்காகவே இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் விதிக்கப்படுகின்றன.

click me!