அனைத்துப் பெண்களின் விருப்ப பெரு நகரங்கள் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை: ஆய்வில் புதிய தகவல்!!

Published : Mar 10, 2023, 04:26 PM IST
அனைத்துப் பெண்களின் விருப்ப பெரு நகரங்கள் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை: ஆய்வில் புதிய தகவல்!!

சுருக்கம்

தேசிய தலைநகரான புதுடெல்லி உள்ளிட்ட வடமாநில நகரங்களை விட, தென்னிந்தியாவில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு போன்ற நகரங்களில் வசிக்கவும், வேலை செய்யவும் பெண்கள் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. முதல் பத்து இடங்களில் சென்னை, கோவை, மதுரை இடம் பெற்றுள்ளன.

பெண்களால் விரும்பப்படும் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் முதல் 10 நகரங்களாக சென்னை, புனே, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகியவை இடம் பெற்றுள்ளன.  

பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறிய நகரங்கள் பட்டியலில் திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், புதுச்சேரி, சிம்லா, மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் பெலகாவி ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

தமிழ்நாட்டில் இருந்துதான் அதிகமான நகரங்கள் இந்த விருப்பப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை 78.41 மதிப்பெண்களுடன் முதல் இடத்தில் உள்ளது. சிறிய நகரங்கள் பட்டியலில் திருச்சி 71.61 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும் உள்ளது.

தமிழ்நாட்டின் மூன்று நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. அதே நேரத்தில் பத்து லட்சத்துக்கும்  குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், முதல் ஐந்து நகரங்கள் அனைத்தும் தென் மாநிலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. 

உங்க குலதெய்வ கோயிலிலிருந்து இந்த 1 பொருளை கொண்டு வந்தால் போதும்.. கஷ்டங்கள் இருந்த இடம் தெரியாம காணம போகும்

14வது இடத்தில் டெல்லி:

புது டெல்லி 41.36 மதிப்பெண்களுடன் 14 வது இடத்தில் உள்ளது. முதல் நகரத்துடன் ஒப்பிடுகையில் இது  30 புள்ளிகள் குறைவாக உள்ளது. பெண்களுக்கான முதல் 10 நகரங்களில் டெல்லி இடம் பெறாதது ஆச்சரியமான ஒன்று இல்லை என்று  ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பல மாநிலங்களின் தலைநகரங்கள் இரண்டு பிரிவுகளிலும் முதல் 25 இடங்களுக்குள் இடம் பெறவில்லை. முதல் 25 இடங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த நகரங்கள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலான மாநில தலைநகரங்கள் பொதுவாக அரசியல், சமூக-பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன என்று  ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகரங்கள் அடுக்கு-1, 2, 3 அடிப்படையில் 111 நகரங்களில் 783 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கை வசதி, பாதுகாப்பு மற்றும் நகர வசதிகள் உள்ளிட்ட சமூக உள்ளடக்க அம்சங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பன்முகத்தன்மை, சமத்துவம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் அவ்தார் 'வியூபோர்ட் 2022 - இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டது. அதன் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை எழுந்ததும் எதை சாப்பிடணும்.. முதல்ல சிறந்த காலை உணவை பத்தி தெரிஞ்சுக்கங்க.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்