60 வயதைக் கடந்த மூதாட்டி 25 வயது இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு தனது எட்டாவது குழந்தைப் பெற தயாராக இருக்கிறார்.
62 வயதான செரில் தனது 25 வயது கணவர் குரான் மெக்கெய்னுடன் 8வது குழந்தையைப் பெற தயாராக உள்ளார். ஏற்கனவே 17 பேரக்குழந்தைகளுக்குப் பாட்டியான அவர் இதற்கு முன்பே ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார். 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செரிலுக்கும் குரானுக்கும் திருமணம் நடந்தது.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செரில் தனக்குப் பிறக்க இருக்கும் எட்டாவது குழந்தை பற்றிப் பேசினார். "என் வயதின் காரணமாக, என்னால் குழந்தையைப் பராமரிக்க முடியாது என்கிறார்கள். அதனால் என்ன? இப்போதும் நான் போதிய ஆற்றலைப் பெற்றிருக்கிறேன். நான் அதை ஒரு விஷயமாகப் பார்க்கவில்லை. என்னாலேயே குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது, ஆனால் வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஏற்கனவே மூன்று முறை வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுள்ளோம்" என்று அவர் கூறினார்.
திருமண விழாவில் நடனமாடிய பெண் மீது பணத்தை வீசி எறியும் காங்கிரஸ் தொண்டர்
இந்நிலையில், செரிலும் அவரது இளம் கணவர் குரானும் தங்களுக்குப் பிறக்க உள்ள புதிய குழந்தை பற்றி டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்த வீடியோவால் நெட்டிசன்களிடம் இருந்து அவர்கள் உறவு குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன. இருப்பினும், அவர்கள் அந்த விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.
"இது எங்கள் காதல். பலர் எங்கள் காதலைப் புரிந்துகொள்கிறார்கள். மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் TikTok இல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எங்கள் வாழ்க்கை சமூகத்திற்கு இயல்பானதாக இருக்காது" என்று குரான் சொல்கிறார்.
"நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், மகிழ்ச்சியான, ஆரோக்கியமான திருமண வாழ்க்கையில் இருக்கிறோம். உலகமே எதிர்த்தாலும் நாங்கள் எங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடர்வோம்" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். டிக்டாக்கில் இவர்களை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.
அந்தரத்தில் மாட்டிக்கொண்ட இளம்பெண்! பாராகிளைடிங் செய்தபோது நேர்ந்த விபரீதம்!