அதிகாலையில் தாம்பத்யம்..! ஆஹா உடலில் இப்படி ஒரு மாற்றம் வருமா..?

First Published Jul 17, 2018, 12:35 PM IST
Highlights
if we had sex in the early morning we can feel so better feel


தாம்பத்ய வாழ்க்கை என்பது மிகவும் புனிதமான ஒன்றாக தான் இன்று வரை பார்க்கப்பட்டு வருகிறது.அந்த காலக்கட்டத்தில் தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே மிகவும் வலிமையாக காணப்பட்டது என்று கூட சொல்லலாம்.

ஆனால் இன்றைய காலங்களில் எதற்கும் நேரம் இல்லை என்று கூறி, தாம்பத்யத்தில் அந்த அளவிற்கு ஆர்வம் காண்பிப்பதாக தெரியவில்லை என்றே கூறலாம்

பம்பரம் போல் சுழன்று வேலை வேலை என ஓடிக்கொண்டே  இருப்பதால், தாம்பத்ய வாழ்கையில் சற்று தொய்வு ஏற்படுகிறது

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, உடலுறவில் ஈடுபடும் போது பொதுவாகவே இரவு நேரத்தில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர்.அதில் குறிப்பாக இரவு உறங்க செல்லும் போது உடலுறவில் ஈடுபட்டு  உறக்கம் கொள்கின்றனர்.

ஆனால் காலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது கணவன்  மனைவிக்கு அந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்கிறது ஆய்வு.அதிகாலை நேரத்தில் உடலுறவு கொள்ளும் போது ஆக்சிடோசின் உடலில் இருந்து வெளிப்படுவதால், நம்மை புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும் என்கிறது ஆய்வு

மன அமைதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்து இருக்குமாம். மேலும், சளி, காய்ச்சல் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கும்

பெண்களது கூந்தல், சருமம், நகம் ஆகியவை எப்போதும் நன்கு  ஆரோக்கியமானதாக இருக்குமாம்.அதிகாலை  வேளையில், உடலுறவில்  ஈடுபடுவதால்  இப்படிப்பட்ட நன்மைகள் இருக்கிறது என்கிறது  ஆய்வு.

click me!