ஒரு நபருக்கு எதிர்மறை ஆற்றல் உள்ளதா இல்லையா என்பதை சொல்லும் சில அறிகுறிகள் உள்ளன.
பல சமயங்களில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது நமக்கே தெரியாது. சில நேரங்களில் சில எதிர்மறை ஆற்றல்கள் நமக்குள் இருக்கலாம். எனினும், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது கடினம். இது நம் வாழ்க்கையை மோசமாக்கலாம். எந்தவொரு நபரிடமும் எதிர்மறை ஆற்றல் வெவ்வேறு வழிகளில் வெளிப்படும், அவரது வெளிப்பாடு, நடத்தை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கிறது. ஒரு நபருக்கு எதிர்மறை ஆற்றல் உள்ளதா இல்லையா என்பதை உங்களுக்குச் சொல்லும் சில அறிகுறிகள் உள்ளன.
நமது பிரபஞ்சம் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்தது. எனவே நாம் அனைவருமே நல்ல அல்லது கெட்ட வழிகளில் நம்மைப் பாதிக்கும் சக்திகளால் சூழப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு சிலரின் ஆற்றல் மிகவும் வலுவானது, எதிர்மறை ஆற்றல் அவர்களை ஆக்கிரமிக்க முடியாது, மற்றவர்கள் பலவீனமான ஆற்றலுக்கு ஆளாகிறார்கள். ஒரு நபரிடம் காணப்படும் எதிர்மறை ஆற்றலின் அறிகுறிகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
வீட்டில் Money Plant இருக்கா? இதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.. இல்லன்னா சிக்கல்..
எதிர்மறை எண்ணங்கள் :
நீங்கள் எப்போதும் எதிர்மறையான சிந்தனையை உணர்ந்தால், அது உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல் காரணமாக இருக்கலாம். உங்கள் எண்ணங்கள், நீங்கள் பேசும் விதம் மற்றும் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளும் விதம் ஆகியவற்றிலிருந்து அதை அறியலாம். உங்கள் மனதில் நிலையான எதிர்மறை எண்ணங்கள், அவநம்பிக்கை மற்றும் பொதுவாக வாழ்க்கையில் எதிர்மறையான அணுகுமுறைகள் உடலில் எதிர்மறை ஆற்றலைக் குறிக்கின்றன.
எளிதில் கோபம் வருவது
நீங்கள் எந்த காரணமும் இல்லாமல் மிகவும் கோபப்படுகிறீர்கள் என்றாலோ அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலோ, அது எதிர்மறை ஆற்றலால் இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கோபத்தை யார் மீதும் வெளிப்படுத்தலாம். நீங்கள் குழந்தைகள் அல்லது துணையுடன் கோபப்படலாம், ஆனால் அது உங்களுக்குள் இருக்கும் தீய சக்தியின் அடையாளமாக இருக்கலாம்.
திடீரென விழிப்பது
இரவில் தூக்கத்தில் இருந்து திடீரென எழுந்து தூங்குவதில் சிரமம் இருந்தால், அது உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல் காரணமாக இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். சமூகமாக இருப்பதைத் தவிர்ப்பது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து விலகி இருப்பது மற்றும் மற்றவர்களிடமிருந்து உங்களைத் தனிமைப்படுத்துவது உங்களுக்குள் இருக்கும் தீய சக்தியின் அடையாளமாக இருக்கலாம்
பசியின்மை
பசியின்மை மற்றும் சரியாக சாப்பிடாமல் இருப்பது எதிர்மறை ஆற்றலின் அறிகுறியாகும். நீங்கள் உங்கள் வழக்கத்தை சரியாகப் பின்பற்றாமல் இருப்பது, அதாவது உங்களுக்கு பசி இல்லை என்றால், சரியாக சாப்பிடாமல் இருந்தால், அது உங்கள் உடலில் எதிர்மறை ஆற்றலின் அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் (எரிச்சல்), உங்கள் உடல்நலம் மோசமாக பாதிக்கப்படலாம். அத்தகைய அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக ஒரு நிபுணரை அணுகவும்.
ஆர்வம், உற்சாகம் குறைவு
எந்த ஒரு வேலையையும் செய்ய உங்களுக்கு உற்சாகம் இல்லாமல், தயக்கத்துடன் வேலையைத் தொடர்ந்தால், அதற்கு உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல் காரணமாக இருக்கலாம். இதனுடன், தலைவலி, சோர்வு அல்லது பிற உடல் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறை சொல்வது
எல்லாவற்றை பற்றியும் தொடர்ந்து குறை சொல்வது பெரும்பாலும் எதிர்மறை ஆற்றலால் நிரப்பப்படுகிறார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் வேலை, உறவுகள், உடல்நலம் அல்லது மனதில் தோன்றும் எதையும் பற்றி குறை கூறுகிறார்கள். மேலும், மற்றவர்களை தொடர்ந்து விமர்சிப்பதும் எதிர்மறை ஆற்றல்.
ஏன் திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது? முக்கிய காரணங்களே இவை தானாம்..