
விந்து கசிவு என்பது ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும், சிறுநீர் கழிக்கும் போது, கழிப்பறையைப் பயன்படுத்தும் போது மற்றும் நீங்கள் உடலலுறவில் ஈடுபடும்போதும் என்று விந்தணுக் கசிவு அதிகமாகும் பல நிகழ்வுகள் உள்ளன.
சரி முதலில் விந்தணுக் கசிவு எதனால் ஏற்படுகிறது என்பதைப் பற்றிய தெளிவாக பார்க்கலாம்..
சிறுநீர் கழிக்கும்போது..
சிறுநீர் கழிக்கும் போது விந்தணு கசிவு ஏற்படும் பிரச்சனைக்கு பல்வேறு காரணிகள் உள்ளன, மேலும் இந்த காரணங்கள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் என்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும். அதிகப்படியான சுயஇன்பம் இதற்கு ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. மேலும் சிறுநீர் பையில் பிரச்சனை உள்ளவர்களுக்கும் சிறுநீர் வழியாக விந்து வெளியேறும். உடம்பில் ஜின்க் குறைபாடு இருப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கும். அதீத புகை மற்றும் குடிப்பழக்கமும் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன.
ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் உங்கள் கை பளபளக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..!!
உடலுறவின்போது..
பொதுவாக உடலுறவின்போது விந்து வெளியேறுவது சகஜம் தான், ஆனால் சில சமயங்களில், சில ஆண்கள் தங்களது துணையுடன் இன்பமாக பேசிக்கொண்டிருக்கும்போதே விந்து வெளியேற்றம் ஏற்படும். ஆனால் இவ்வகை பிரச்சனைகளுக்கு இன்னும் சரியான தீர்வு கண்டறியப்படவில்லை. ஆனால் தனது துணையுடன் உடலுறவு குறித்து பேசும்போதே விந்து வெளியேறுவது சுய கட்டுப்பாட்டை இழப்பதால் மட்டுமே நிற்கின்றது என்கிறார்கள் மருத்துவர்கள்.
கழிப்பறை பயன்படுத்தும்போது..
ஆண்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பொதுவான பிரச்சனை தான் கழிப்பறை பயன்படுத்தும்போது விந்து வெளியேற்றம் அடைவது. நரம்புகள் பலவீனமடையும் போது, அல்லது புரோஸ்டேட் சுரப்பிகளில் பிரச்சனை ஏற்படும்போது இது நடக்கிறது. அடிக்கடி செய்யப்படும் சுயஇன்பம், அதிக நேரம் பாலியல் சம்மந்தமான நினைவுகளை கொண்டிருப்பது போன்ற விஷயங்களும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக திகழ்கின்றன.
இதற்கு என்ன தீர்வு?
நல்ல உடல் நலம் மற்றும் மன நலம் காப்பதே இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்கிறார் மருத்துவர்கள். குறிப்பாக சுயஇன்பம், அதை செய்வது தவறில்லை என்றபோது அதற்கான அளவு என்ற ஒன்று உள்ளது. மேலும் சத்தான உணவுகளை உண்டு, முறையாக உடலை பராமரித்து வந்தால் நிச்சயம் இந்த விந்து வெளியேற்ற பிரச்சனை மிகவிரைவில் சரியாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.