
மகிழ்ச்சியோடு கூடிய புத்துணர்ச்சி அளிக்கும் ஹெய்னெகன் சில்வர் வகை பீர், உட்கொள்பவர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் ஒரு பீர் வகை. சுமார் 28 நாட்களுக்கு பல நிலைகளை தாண்டி மெதுவாக உருவாக்கப்படும் இந்த பீரின் சுவை அருந்துபவர்களுக்கு சிறந்த அனுபவத்தை தருகின்றது என்று தான் கூறவேண்டும். ஒரு மிருதுவான சுவையுடன், புத்துணர்ச்சியூம், மென்மையான அனுபவத்தையும் தருகின்றது இந்த வகை பீர்.
இந்தியாவில்.. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் இந்த வகை பீர்கள் அதிகமாக பலரால் விருப்பப்பட்டு வந்து, இன்றைக்கு இந்தியாவில் பலரின் விருப்பமான பீர் பிராண்டாக மாறியுள்ளது ஹெய்னெகன் என்றால் அது மிகையல்ல.
கிங்ஃபிஷர் அல்ட்ரா.. இது கிங்ஃபிஷர் நிறுவனத்தின் பிரீமியம் பீர் பிராண்டாகும், இதன் சுவைக்காக இதை விரும்பும் மக்கள் பலருண்டு. இதை குடிக்கும்போது உங்கள் இதழ்களில் ஒரு சிறப்பான சுவை நடனமாடும் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக உங்கள் நண்பர்களுடன் வார இறுதியை கொண்டாட ஒரு சிறந்த பீர் பிராண்ட் கிங்ஃபிஷர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களை விட வயதான பெண்களுடன், ஆண்கள் உடலுறவு வைக்க இதெல்லாம் தான் காரணமாம்..
இந்த அல்ட்ரா பிராண்ட் மூன்று வகைகளில் கிடைக்கின்றது, கிங்ஃபிஷர் அல்ட்ரா (லைட் பீர்), கிங்ஃபிஷர் அல்ட்ரா மேக்ஸ் (ஸ்டராங் பீர்), மற்றும் கிங்ஃபிஷர் அல்ட்ரா விட்பியர் என்று மூன்று வெவ்வேறு வகைகளில் இது இந்தியாவின் பல இடங்களில் கிடைக்கின்றது.
பீர் பிராண்டுகளை குறிப்பிடும்போது அதில் பட்வைசர் இல்லாமல் இருப்பது நியாயமல்ல, அதன் சுவையான நறுமணம், புத்துணர்ச்சியூட்டும் சுவை எந்தவித வானிலைக்கும் ஏற்ற ஒரு பீராக அதை மாற்றுகின்றது. அமெரிக்க நாட்டை பிறப்பிடமாக கொண்ட இந்த பீர், சிறந்த பார்லி மால்ட்டுடன் இணைத்து உருவாக்கப்படுவதால் தனித்துவமான சுவை கிடைக்கின்றது.
லோன் வூல்ப், கடந்த ஆண்டு டெல்லியில் வெளியிடப்பட்டது இந்த புது வகை பீர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள பீர் விரும்பிகளை முழுமையாக டார்கெட் செய்து வெளியிடப்பட்ட ஒரு புதுவகை பீர் தான் இது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்ததாக கருதப்படும் இந்த Lone Wolf பீர் குடிப்பவர்களுக்கு மெல்லிய அனுபவத்தை தருகின்றது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.