ஆண்மை குறைப்பாட்டை எளிதில் தெரிந்துகொள்வது எப்படி..?

By ezhil mozhiFirst Published Nov 29, 2019, 7:01 PM IST
Highlights

தாம்பத்யத்தில் ஈடுபடும் போது, உங்களுக்கு முழு விருப்பம் உள்ளதா என நினைத்து பாருங்கள். ஏதோ கட்டாயத்திற்கு ஈடுபட்டால், தாம்பத்ய உறவு திருப்தியாக இருக்காது.

ஆண்மை குறைப்பாட்டை எளிதில் தெரிந்துகொள்வது எப்படி..? 

பொதுவாகவே ஆண்கள் சந்தித்து வரும் பிரச்சனையில் தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சனை தான் பெரும் பிரச்சனையாக மாறி விடுகிறது சில சமயத்தில்.

இன்னும் சொல்லப்போனால் ஆண்மை குறைவு பிரச்சனை இருந்தாலும் சரி, தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றாலும் சரி.. இது ஒரு விதமான மன அழுத்தத்தை கொடுக்கும்.சரி ஒரு ஆணுக்கு உண்மையிலிலேயே ஆண்மை குறைவு உள்ளதா என்பதை எப்படி தங்களுக்கு தானே தெரிந்துகொள்ளலாம் தெரியுமா..?

அதாவது தாம்பத்யத்தில் ஈடுபடும் போது, உங்களுக்கு முழு விருப்பம் உள்ளதா என நினைத்து பாருங்கள். ஏதோ கட்டாயத்திற்கு ஈடுபட்டால், தாம்பத்ய உறவு திருப்தியாக இருக்காது. இதற்கு அடுத்தபடியாக, எப்போதுஈடுபட்டாலும் இதே போன்ற பிரச்னை உங்களுக்கு இருக்கா என சிந்தித்து பாருங்கள். இதை ஒப்பிட்டு பார்த்தே நமக்கு நாமே தெரிந்துக்கொள்ளலாம் ஆண்மை குறைவு பிரச்சனை உள்ளதா என்று...

மேலும், மாறி வரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறை இது இரண்டும் தான் இது போன்ற பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதை எல்லாம் தாண்டி அதிக மன அழுத்தம் இருந்தாலும் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஒரு சிலருக்கு மது அருந்துதல், சிகரெட் பிடித்தல், சர்க்கரை மற்றும் இதய நோய் உள்ளவர்கள், தண்டுவட பிரச்னை உள்ளவர்கள். இவர்களுக்கு பொதுவாகவே தாம்பத்ய வாழ்க்கையில் சில பிரச்னை வர தான் செய்யும்.

ஆண்மை குறைவு பிரச்சனை எந்த வயதில் வர வாய்ப்பு உள்ளது தெரியுமா..? 

பொதுவாகவே , அந்த கால கட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு தான் இந்த பிரச்னை வர தொடங்கும். அதே சமயத்தில் நல்ல உணவு பழக்க வழக்கம் கொண்டவர்கள், ஆரோக்கியமான உடலை கொண்டவர்கள் எழுபது வயதாகியும் இது போல பிரச்சனையை சந்தித்ததே இல்லையாம்.

அனால் இன்றோ, 30 வயதிற்குட்பட்ட ஆண்களில் 30 சதவீதம் பேர் ஆண்மை குறைபாடு, தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கெல்லாம் காரணம் அதிகம் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் என்றே கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் கண்டதை உண்பதால் இது போன்ற பிரச்சனை வருகிறதாம்.

இது ஒரு பக்கம் இருக்க ஆண்மை குறைபாடு ஏற்படும் வயதாக கணிக்கப்பட்டுள்ளது - வயது 34 முதல் 36 வயதிற்குள் தான் அதிகமாம். எனவே நல்ல பழக்க வழக்கம் மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொண்டு வந்தாலே போதும் எந்த விதமான குறைபாடும் இல்லாமல் வாழலாம்.

இதை முதலில் தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு எந்த பிரச்னையும் வராமல் பார்த்துக்கொளவது நல்லது.

click me!