முகப்பருக்கள் காரணமாக ஏற்படும் தழும்பை ஒரே வாரத்தில் போக்க இந்த உப்பு மட்டும் போதும்..!

By ezhil mozhiFirst Published May 4, 2019, 3:28 PM IST
Highlights

நம் வீட்டில் உள்ள உப்பை பயன்படுத்தி முகப்பரு வர விடாமல் தடுக்கலாம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை  பார்க்கலாம். 
 

நம் வீட்டில் உள்ள உப்பை பயன்படுத்தி முகப்பரு வர விடாமல் தடுக்கலாம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். 

இதற்காக வெதுவெதுப்பான நீரில் உப்பு நீர் சேர்த்து பயன்படுத்தலாம். இப்படி சேர்த்து தயாரித்த நீரில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவி வர நல்ல மாற்றம் இருக்கும். இவ்வாறு பயன்படுத்தும் போது சருமத்திலுள்ள ஈரப்பதத்தின் அளவு உப்பு சற்றே குறைகின்றது.

பொதுவாகவே நம் சருமத்தில் உள்ள அளவுக்கு அதிகமான எண்ணெய் போன்றவற்றால்தான் அதிக பருக்கள் ஏற்படுகிறது. இதனை குறைக்க இதுபோன்று உப்புடன் சேர்ந்த நீரை நம் முகத்தில் பஞ்சு கொண்டு நனைத்து பயன்படுத்தி வந்தால்,  பருக்கள் வராமல் இருக்கும். பருக்களினால் ஏற்படும் தழும்புகள் போக்குவதற்கும் உப்பு பெரிதளவு உதவுகிறது.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்... ஒரு சிலருக்கு உப்பு தண்ணீர் சருமத்துளைகளில் படும்பொழுது அதிக வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் புதிதாக உருவாகியுள்ள பருக்கள் மீது உப்பு தண்ணீர் படுவதால் எரிச்சல் ஏற்படும்.

உப்பு  மற்றும் தேன்..!
 
நான்கு ஸ்பூன் தேனுடன் இரண்டு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து தொடர்ந்து முகத்தில் தடவி வர பருக்கள் வராது. இவ்வாறு 15 நிமிடம் செய்ய வேண்டும்.

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் பயன் தரக்கூடியது. இந்த எண்ணெயுடன் உப்பை சேர்த்து ஒரு மாஸ்க் தயாரித்து நம் முகத்தில் போட்டு வரலாம். இதனால் நம் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்கிறது. இது போன்று தினமும் 5 நிமிடங்கள் செய்து வந்தால் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிக சிறப்பான ஒரு நன்மையை கொடுக்கும். உப்பு சருமத்தின் வறட்சி அதிகரிக்க செய்தாலும், எண்ணெய் ஈரப்பதத்தை தந்து சருமத்திற்கு நல்லது செய்யும். எனவே தேங்காய் எண்ணெயில் உப்பை சேர்த்து பயன்படுத்துவது நன்மையைக் கொடுக்கும்.

click me!