இந்த '1' விஷயம் சரியா பண்ணாம 10,000 காலடிகள் நடந்தாலும் வேஸ்ட்தான் தெரியுமா?

By Kalai Selvi  |  First Published Jan 2, 2025, 9:19 AM IST

Steps Per Minute : நீங்கள் ஒரு  நிமிடத்திற்கு எத்தனை காலடிகள் நடப்பது கூடுதல் பலன்களை பெற உதவும் என இந்த பதிவில் காணலாம். 


நடைப்பயிற்சி உடற்பயிற்சிகளில் மிதமான பயிற்சியாகும். உலக சுகாதார அமைப்பு நடைபயிற்சி உடலுக்கு எவ்வளவு ஆரோக்கியமானது என்பது குறித்து விளக்கியுள்ளது. பல ஆய்வுகளில் குறைந்த உடற்தகுதி (Fitness) கொண்டவர்களை விடவும் நல்ல ஏரோபிக் ஃபிட்னஸ் இருப்பவர்களுக்கு நாள்பட்ட நோய்க்கான அபாயம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாக்கிங் சென்றால் உடல் வலுவாகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. எடையை கட்டுக்குள் வைக்கும். மனசோர்வை தடுத்து மனநலனை மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்திற்கும் நல்ல பயிற்சி என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. 

ஆனால் நடைபயிற்சியில் கவனம் செலுத்தும் போது சரியாக செய்ய வேண்டும். அதை சரியாக செய்யாமல் 10 ஆயிரம் காலடிகள் நடந்தால் கூட உடலுக்கு அதனால் போதிய நன்மைகள் கிடைக்காது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு நபர் சராசரியாக ஒரு நாளில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் காலடிகள் நடக்க வேண்டும் என ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஆனால் ஒரு நாளில் ஆயிரக்கணக்கில் நடப்பதை விட ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு காலடிகள் நடக்கிறோம் என்பதே முக்கியம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  காலைல வாக்கிங் போறது முக்கியமில்ல.. இந்த '3' தவறுகளை பண்ணாம இருக்கனும்!! 

அண்மையில் நடைபயிற்சி நிபுணரான டாக்டர் எல்ராய் அகுயார் என்பவரின் குழு ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற இதழில் வெளியானது. அந்த ஆராய்ச்சி முடிவுகளில் மிதமான உடற்பயிற்சியில்  தீவிரமாக செயல்படுவது கூடுதல் பலன்களை தரும் என்பதை சுட்டிகாட்டியிருந்தார்கள். 

ஏற்கனவே குறைவான உடல் செயல்பாடுகளை கொண்டுள்ள ஒருவர் நடைபயிற்சி செய்வது அவருடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக அவர்கள் 'மிதமான தீவிரம்' என்பதன் அடிப்படையில் தீவிரமாக நடைபயிற்சி செய்தால் சில நிமிடங்களில் மூச்சு வாங்கும். உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படும். எடை குறைய உதவும். 

இதையும் படிங்க:  ஓவர் வாக்கிங் உடம்புக்கு நல்லதல்ல.. பொதுவா நடைபயிற்சியில்  பண்ற '3' தவறுகள்!! 
 
எவ்வளவு காலடிகள் நடக்கலாம்? 

நாம் எவ்வளவு காலடிகள் நடக்கிறோமோ அதற்கு தகுந்த பலன்களை பெறுவோம். ஒரு நிமிடத்தில் 100 முதல் 130 காலடிகள் நடப்பது உங்களுடைய இதயத்துடிப்பை வேகமாக வைத்திருக்கும். இதற்காக அதிகமான ஆற்றல் செலவிடுவீர்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என கூறப்படுகிறது. ஒரு நிமிடத்தில் 100 காலடிகள் என்பது எட்ட முடியாத இலக்கு அல்ல. ஆனால் இப்படி நடப்பதற்கு அதிக அளவிலான ஆற்றலை செலவழித்து வேகமாக நடக்க வேண்டும். இது உடலை நன்கு இயங்கச் செய்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி 20 முதல் 30 நிமிடங்கள் நடந்தால் கூட அது நல்ல பலன்களை தரும். 

எப்படி சாத்தியம்? 

நீங்கள் எவ்வளவு தூரம் நடப்பது நல்லது, எப்படி நடந்தால் கெட்டது என்பதற்கு குறிப்பிட்ட எல்லைகள் கிடையாது. நீங்கள் அதிகமாக நடந்தால் அது உங்களுக்கு நல்ல பலன்களை தரும். ஆனால் 10 ஆயிரம் காலடிகள் நடந்துதான் நீங்கள் மொத்த பலன்களையும் பெற முடியும் என்றில்லை. இந்த முறையில் நடந்தால் குறைந்த காலத்தில் அதிக பலன்களை பெற முடியும். ஒரு நிமிடத்தில் 100 காலடிகள் என்பது ஒட்டுமொத்த உடலுக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும். உங்களால் தொடர்ச்சியாக 30 நிமிடங்களும் இதே போல நிமிடத்திற்கு 100 காலடிகள் என நடக்க முடியாவிட்டால் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை மிதமான நடையை மேற்கொள்ளலாம். இடையிடையே மெதுவாக நடக்கலாம். நாட்கள் செல்ல செல்ல உங்களுடைய வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

click me!