சர்க்கரை நோயாளிகள் பால் டீ அருந்தலாமா? எப்போது குடித்தால் சர்க்கரை அளவு நார்மலாக இருக்கும் தெரியுமா?

By Kalai SelviFirst Published Jul 6, 2024, 12:13 PM IST
Highlights

Milk Tea For Diabetes : சர்க்கரை நோயாளிகள் டீ குடிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். உண்மையில் அவர்கள் பால் டீ குடிக்கலாமா? குடிக்க கூடாதா? என்பது குறித்து இங்கு காணலாம். 

பொதுவாகவே, அனைவருக்கும் டீ பிடிக்கும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் பால் கலந்த குடிக்கலாமா.. குடிக்க கூடாதா..? ஒருவேளை அப்படி குடித்தால் ஏதாவது, பாதிப்புகள் ஏற்படுமா இல்லையா...? என்ற சந்தேகம் இருக்கும். எனவே, இது குறித்து இந்த பதிவு முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா?:

Latest Videos

சர்க்கரை நோயாளிகள் என்ன உணவு சாப்பிட்டாலும் அதன் கிளைசெமிக் குறியீடு ரொம்பவே முக்கியம். மேலும், எளிதில் ஜீரணமாகக் கூடியதும், பசி உணர்வை கட்டுப்படுத்தக்கூடிய உணவை தான் சாப்பிடுவது நல்லது.  எனவே பால் கலந்த டீயை குடிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அதை எப்படி அருந்துகிறோம் என்பதுதான்  மிக மிக முக்கியம். அதற்கான சில வழிமுறைகளை குறித்து நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சர்க்கரை:

சர்க்கரை நோயாளிகள் குறைந்த கொழுப்புள்ள பாலில் டீ போட்டு குடிக்கலாம். ஆனால் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக, நாட்டுச் சர்க்கரை அல்லது குறைந்த கிளசிமிக் கொண்ட இனிப்புகளை தான் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க:  சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் இந்த 5 வகையான காலை உணவுகள் தான்..! லிஸ்ட் இதோ..!!.

அளவு முக்கியம்:

சர்க்கரை நோயாளிகள் பால் டீ குடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. மேலும், பால் கலந்த டீயில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. எனவே, நீங்கள் அதை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆகவே நீங்கள் பால் டீ குடிக்க விரும்பினால், குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் கார்போஹைட்ரேட் அளவை நீங்கள் கட்டுப்படுத்தலாம். 

இதையும் படிங்க:   சர்க்கரை நோயாளிகளுக்கு எது நல்லது..? பசும்பால் அல்லது எருமை பால்..??

பால் டீக்கு பதில் வேறு ஏதாவது..

ஒருவேளை உங்களுக்கு சர்க்கரை சேர்க்காமல் பால்டி குடிக்க பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அதற்கு பதிலாக கிரீன் டீ, லெமன் டீ, பிளாக் டீ ஆகியவற்றை குடிக்கலாம்.

சர்க்கரை அளவை பரிசோதிப்பது அவசியம்:

நீங்கள் பால் கலந்த டீ குடித்த பிறகு உங்களது சர்க்கரை அளவில் ஏதாவது மாற்றங்கள் நடந்து இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அப்படி மாற்றங்கள் ஏதேனும் நடந்தால், நீங்கள் டீ குடிக்கும் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.. இதற்காக நீங்கள் பால் கலந்த டீயை குடிக்க வேண்டாம் என்று அவசியமில்லை. ஆனால், உங்களது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காத படி குறைந்த அளவில் குடியுங்கள். அதுதான் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

எப்போது டீ குடிப்பது நல்லது? 

சர்க்கரை நோயாளிகள் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும். இதற்கு பதிலாக மாலை நேரத்தில் டீ குடிக்கலாம். காலையில் பால் டீ குடிக்க விரும்பினால் அதில் எந்த இனிப்பும் சேர்க்காமல் அருந்துங்கள்.

click me!