மனைவிக்கு செக்ஸில் ஆர்வம் வராததற்கு இதுதாங்க காரணம்.. உடனே சரி செய்ங்க..

By Asianet Tamil  |  First Published Jul 5, 2024, 9:45 PM IST

சில சமயங்களில் மனைவி உடலுறவில் இருந்து விலகி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அது என்னவென்று குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.


உங்கள திருமண உறவு வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்க நெருக்கம் மிகவும் முக்கியம். இது ஒருவருக்கொருவர் ஈர்ப்பையும், காதலையும் வலுவாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் காலம் செல்ல செல்ல இவை அனைத்தும் குறைவது இயல்பு. இருந்த போதிலும் சில சமயங்களில் ஆண்கள் விருப்பமாக இருந்தாலும் மனைவி நெருக்கத்தில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை. இப்படிப்பட்ட உறவில் நீங்கள் இருந்தால் அதற்கான காரணம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். அது குறித்து இங்கே பார்க்கலாம்.

உறவில் மகிழ்ச்சியின்மை:
பாலியல் ஆர்வம் என்பது ஒரு பெண் தனது உறவை எப்படி உணருகிறாள் என்பதை பொறுத்து தான். மனைவி உங்கள் மீது கோபமாக இருந்தால் அல்லது உறவில் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால், அவள் உடல் உறவில் ஆர்வம் காட்டமாட்டாள். எனவே, அவளிடம் ஏதாவது பிரச்சனையை என்று கேட்டு, அதை தீர்த்து பிறகு உடலுறவில் ஈடுபடுங்கள்.

Tap to resize

Latest Videos

undefined

நம்பிக்கை இல்லை:
மனைவி உடலுறவில் ஆர்வம் காட்டவில்லை என்றால், உங்கள் மீது அவளுக்கு நம்பிக்கையின்மையே முக்கிய காரணம். அதாவது, நீங்கள் உங்கள் மனைவிக்கு ஏதாவது வாக்கு உறுதியை கொடுத்து அது மீறி இருக்கலாம் அல்லது ஏமாற்றி இருக்கலாம். மேலும் கடந்த காலத்தில் வசீகரமும் ஈர்ப்பும் உங்களுக்கு இப்போது வேண்டுமென்றால், கடந்த காலங்களில் நீங்கள் செய்த தவறுகளை முதலில் சரி செய்யுங்கள். மேலும், அது குறித்து அவளிடம் மன்னிப்பும் கேட்டு, நம்பிக்கையை மீட்டெடுக்கங்கள்.

இதையும் படிங்க:  இந்த சின்ன விஷயங்கள் கூட துரோகம் தான் தெரியுமா? அதுவும் கள்ள உறவுக்கு சமம்.. உடனே மாத்திக்கங்க..

வலி:
ஆண்களுக்கும் பெண்களுக்கும் வயதாக ஆக அவர்களது ஹார்மோன் மற்றும் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. முக்கியமாக பெண்களின் பாலியல் ஆர்வம் இதனால் பாதிக்கப்படும். மேலும் நீங்கள் உங்களது விருப்பத்தை அவளிடம் தெரியப்படுத்தினாலும், மிகவும் நிதானமாகவும் மற்றும் புதிய அணுகுமுறையையும் பின்பற்றுவது நல்லது.

சுமைகள்:
வீடு மற்றும் அலுவலக வேலையால் அவளது வேலை அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் உடலுறவில் அதிக ஆர்வம் காட்டமாட்டார்கள். எனவே, நீங்கள் அவர்களுடன் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதும் மூலம் இந்த பிரச்சனையை எளிதில் தீர்க்கலாம்.

இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையில் ஆண்கள் இப்படி பண்ணினால் பெண்களுக்கு ரொம்ப புடிக்குமாம்!!

தொடுதல் அவசியம்:
உடலுறவு என்பது உடல் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இது அவர்களை திருப்திப்படுத்தாது. எனவே, காலையில் எழுந்ததும் ஒருவரையொருவர் முத்தமிடுவது, அரவணைப்பது, நடக்கும்போது கைகளை பிடித்துக் கொண்டு கொள்வது போன்றவை தொடுதலின் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள். இவை அனைத்தும் உடலுறவை மேம்படுத்தும். உடல் தொடுதல் மற்றும் ஈர்ப்பு ஆகியவற்றில் முதலில் கவனம் செலுத்துங்கள். முக்கியமாக, உடனே உடலுறவில் அவசரப்பட வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மன அழுத்தம்:
மன அழுத்தம் காரணமாக உங்கள் மனைவி உடலுறவில் ஈடுபடாமல் போகலாம். அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்பதற்கான காரணத்தை முதலில் கண்டறிந்து, அதிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வாருங்கள்.

புதுமையான விஷயங்கள்:
தினமும் உடலுறவில் ஓரே மாதியாக இருந்தால், அது இருவருக்கும் சலிப்பை ஏற்படுத்தும். எனவே , இதற்காக நீங்கள் புதுமையான விஷயங்களை முயற்சி செய்யுங்கள் அந்த தருணத்தை ரசிக்கும் படியும், உங்களுடன் இருப்பவரையும் ரசிக்கும்படியும், புதுமையான விஷயங்களை செய்தால் கண்டிப்பாக அந்த தருணத்தை நன்றாக உணர்வீர்கள்.

click me!