குடும்பங்களில் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம். மாமனாரின் செயலால் செய்தவறியாது திகைத்த மருமகளின் கேள்விக்கு நிபுணர் கொடுக்கும் விளக்கம் குறித்து இந்த பதிவில் காணலாம்.
"என்னுடைய மாமியார் மாதிரி தங்கமானவரை காண்பது கடினம். அவர் எனக்கும், என் கணவருக்கும் கிடைத்த வரம். எப்போதும் எனக்கு பக்கபலமாக இருப்பார். என் மாமனாரும் நல்லவர் தான். அவரை நான் என்னுடைய சொந்த தகப்பன் போல தான் நினைக்கிறேன். நானும் என் கணவரும் அவர்களை போல தான் வாழ ஆசைப்பட்டோம். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. என் மாமனார் குறித்து எனக்கு தெரிந்த உண்மை என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக அவர் என்னுடைய மாமியாரை ஏமாற்றி கொண்டிருக்கிறார். இது எனக்கு சமீபமாகதான் தெரிந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. என் மாமியாரையும், கணவரையும் நினைத்து வருத்தமாகவுள்ளது. இதை அவர்களிடம் சொல்லவும் வருத்தமாகவுள்ளது. இப்போது இதை அவர்களுக்கு சொல்ல வேண்டுமா? அல்லது மனதுக்குள் போட்டு புதைத்து கொள்ளவா?' எனக் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: கணவனின் மொபைலில் பார்த்த அந்த ஒரு விஷயம்... திருமண உறவுக்கே உலை வைத்தது எப்படி?
நிபுணரின் பதில்: இந்த நேரத்தில் உங்களுக்கு மன தைரியம் வேண்டும். இது மிகவும் கடினமான தருணம். இந்த தகவலை உங்கள் கணவரிடமோ, மாமியாரிடமோ சொல்வதை குறித்து நீங்கள் தான் முடிவு எடுக்கவேண்டும். ஆனால் அதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த விஷயம் குறித்து உங்கள் கணவரிடமும் மாமியாரிடமும் கூறுவதற்கு முன்பாக கூடுதலான விவரங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் மாமனார் குறித்து உங்களுக்கு கிடைத்த தகவல்கள் உண்மையானதா என்பது குறித்து மீண்டும் ஒருமுறை முழுவதுமாக ஆதாரத்துடன் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய கணவரிடம் இது குறித்து பேசுங்கள். உங்களுக்கு கிடைத்த தகவல்கள் குறித்து அவருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு மற்றொரு பரிமாணத்தில் விஷயங்கள் புரியலாம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கணவரிடம், நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பேசி விடுங்கள்.
இதையும் படிங்க: 'என் மனைவி வயிற்றில் சுமப்பது வேறொரு ஆணின் குழந்தை' தவிக்கும் ஆணுக்கு நிபுணரின் தீர்வு!!
இந்த விஷயத்தில் உங்களுடைய மாமியாரின் உணர்ச்சிகள் குறித்து கூடுதலாக சிந்திக்க வேண்டியது அவசியம். முழுமையாக உண்மைகளை குறித்து தெரிந்த பின்னரே அவரிடம் இது குறித்து தெரிவிக்க வேண்டும். அவருடைய வாழ்க்கையை இது பாதிக்கும் என்பதில் கவனமாக இருங்கள். மேலும் உங்கள் மாமனார் குறித்த உண்மை தெரிந்து கொள்ள அவர் ஆர்வமாக இருக்கிறாரா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இந்த விஷயம் குறித்து உங்களுடைய குடும்பத்தில் பகிர்ந்து கொள்ளும் போது எந்த விளைவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த தாக்கத்தை எதிர்கொள்ளும் மனப்பான்மையோடு இந்த விஷயத்தை கையாளுங்கள். உண்மை தெரிந்த பிறகு என்ன நடக்கும் என்பதற்கு நீங்கள் தயாராக இருப்பது அவசியம்.
இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் முன்பாக சம்பந்தப்பட்ட நபர்களுடைய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுப்பது அவசியம். இது மாதிரியான சிக்கலான நேரங்களில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான தீர்வு கை கொடுக்காது. உங்களுடைய கணவரிடம் முதலில் இது குறித்து கலந்துரையாடுங்கள். உண்மைகளை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய மாமியாரிடம் இந்த விஷயத்தை கொண்டு செல்லுங்கள்.