
மாதுளம் தோலின் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும், மருத்துவ குணங்கள் ஏராளமான நிறைந்துள்ளன.
மாதுளையில், உள்ள தோல், பழம், பூ, பட்டை, காய் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது. உடலில் நைட்ரிக் ஆக்சைட் என்னும் தனிமம் குறையும்போது, மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மைகொண்டது. இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும். இந்த பழத்தின் தோல்கள் மட்டும் 50% பயன்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், மாதுளை ஜூஸை தோல் அதிக ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது.
ஆனால், மாதுளை தோல்கள் நம்மில் பெரும்பாலோனரால் தூக்கி எரிந்து விடுகிறோம். இனி அப்படி செய்யாதீர்கள்.உண்மையில், இவற்றில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிரப்பியுள்ளன.அவை என்னென்னெ என்று கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மாதுளை தோல்களை ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு உடல்நலம் மற்றும் அழகு நலன்களுக்காக தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.மாதுளம் தோலை பொடியாக்கி நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டால் இரு நாள்களில் இருமல் குறையும். மாதுளம் பூவை பாலில் ஊறவைத்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
மாதுளை தோல்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் அதிகம் உள்ளன. மேலும் அவை சருமத்தின் கருமையான திட்டுகளால் வகைப்படுத்தப்படும் ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு சிகிச்சையளிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.
இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் மாதுளை:
மாதுளை தோல்கள் இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நாட்பட்ட நிலைகளுக்கான ஆபத்து காரணிகளைக் குறைக்கிறது.
சமீபத்திய ஆய்வில், 1,000 mg மாதுளைத் தோலைச் சாறு சேர்த்துக் கொள்வது, மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும். ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும். கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது.
புற்றுநோய்க்கு மருந்தாகும் மாதுளை:
மாதுளை தோல்களில் அதிக அளவு புனிகலஜின் உள்ளது, இது பாலிஃபீனால் ஆகும், இது சில சோதனைக் குழாய் ஆய்வுகளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.அதாவது புற்றுநோய் செல்கள் பரவுவதை மெதுவாக்க அல்லது நிறுத்த உதவுகிறது.மேலும், மாதுளை தோல் கல்லீரல் புற்றுநோய்க்கு நன்மை பயக்கும் மற்றும் கல்லீரலைப் பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு மருந்தாகும்:
திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சனை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்தோலை உலர்த்தி பொடியாக்கி, தினமும் ஒரு டீஸ்புன் சாப்பிட்டுவரலாம். அப்படி செய்தால், ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் இவற்றை எடுத்து கொள்ளலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.