
பெண்கள் சிறுமிகளாக இருக்கும்போதே அவர்களிடம் ஒருங்கிணைக்கும் ஆற்றலும், வழி நடத்திச்செல்லும் ஆற்றலும் உருவாகிவிட்டதை நம்மால் ஒவ்வொரு வீட்டிலும் காண முடியும். அதுபோல் கற்றுக்கொள்ளும் திறனும், கற்றதை வெளிப்படுத்தும் திறனும் பெண்களிடம் அதிகம் இருக்கிறது. இருப்பினும், இன்னும் நமது சமூகத்தில் ஆண்களுக்கு கிடைக்கும் அதே சலுகை பெண்களுக்கு கிடைப்பதில்லை.
குறிப்பிட்ட சில ஆண்களால் பெண்கள் பாலியல் பண்டமாக உபயோகப்படுத்த படுகின்றனர். ஏன் தொலைக்காட்சிகளும், விளம்பரங்களுக்கும் கூட பெண்களை பாலியல் பண்டமாக சித்தரிக்கின்றனர். அதுமட்டுமின்றி, பெரும்பாலான இடங்களில் தொழில் துவங்க நினைக்கும் பெண்களை சமூகம் கேலி செய்து, பல இடங்களில் அவர்களை முடக்கிவிடுகிறது. தொழில் நிறுவனங்களை இயக்குவதற்கு ஆண்கள் தான் தகுதியானவர்கள் என்ற எண்ணமே இதற்கு முக்கியக் காரணம்.
இது எல்லாம் ஒரு புறம் இருக்க இந்தியாவில், 68 சதவீத பெண்கள் வாழ்க்கை முறை நோய்களால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அவர்களில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் பேர் அலுவலக வேலை நிமித்தமாக உணவைத் தவிர்ப்பது, மேற்கத்திய உணவு பழக்கம், உடற் பயிற்சி இல்லாமல் இருப்பது போன்றவற்றால் வாழ்க்கை முறை நோய்களால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது
மார்பகப் புற்றுநோய்:
சமீப காலமாக ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால், மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்பட்டுள்ளதை ஆய்வு அறிக்கை சுட்டி காட்டியுள்ளது. குறிப்பாக, கிராம புற பெண்களை விட நகர்ப்புற பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
மனச்சோர்வு முக்கிய காரணம்:
இதற்கு முக்கிய காரணம் தூக்கமின்மை மற்றும் உடற்பயிற்சியின்மை, மதுவுக்கு அடிமையாதல் ஆகியவை மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
பிசிஓஎஸ் பிரச்சனை :
இனப்பெருக்க வயதுடைய பெண்களில் பொதுவாகக் காணப்படுகிறது. இது மாதவிடாய் ஒழுங்கின்மை, உடல் பருமன் மற்றும் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும். பல இருதய நோய்களுக்கு உடல் பருமன் ஒரு முக்கிய ஆபத்து காரணியாகும்.
நாள்பட்ட முதுகுவலி:
நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்ப்பது. கணினி, செல்போன் போன்றவற்றின் அதிகப்படியான பயன்பாடு, உடல் உழைப்பில்லாமை, எடை அதிகரிப்பு போன்றவை நாள்பட்ட முதுகுவலிக்கு பெண்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது. சூரிய ஒளியின் பற்றாக்குறையால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படலாம். இது மேலும் எலும்பு வலியை அதிகரிக்கும் சோர்வுக்கு வழிவகுக்கும்.
கருவுறாமை:
மன அழுத்தம், தாமதமான திருமணம், கருத்தரிப்பதில் தாமதம், உடல் பருமன் மற்றும் பிசிஓ போன்ற பிரச்சனைகள் அத்தகைய பெண்களின் கர்ப்பத்தை சிக்கலாக்குகின்றன. இது அவர்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய், குறைப்பிரசவம் மற்றும் இருதய சிக்கல்களை உண்டாக்குகின்றனர்.மேலும், அதிகப்படியான மன அழுத்தம் முதுமையுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உடல் பருமன் மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உளவியல் சிக்கல்களையும் ஏற்படுத்தும். இவை அனைத்தையும் குறைக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள செய்ய வேண்டியவை.
ஆரோக்கியமான எடையை பராமரித்தல்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல்.
சரியான தூக்கம் (ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம்) போன்றவையாகும்.
எனவே, நமது வாழ்கை முறையில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் மேற்சொன்ன பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.