Women depression: பெண்களுக்கு மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? மகளிர் தின சிறப்பு தொகுப்பு.!

Anija Kannan   | Asianet News
Published : Mar 07, 2022, 08:42 AM ISTUpdated : Mar 07, 2022, 08:47 AM IST
Women depression: பெண்களுக்கு  மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? மகளிர் தின சிறப்பு தொகுப்பு.!

சுருக்கம்

Women depression: மார்ச் 8ஆம் தேதி நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சமீபத்திய அறிக்கையின் படி, பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மனச்சோர்வை எதிர்கொள்கின்றனர் என்று தெரிய வந்திருக்கிறது.

பெண்கள், ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். இருப்பினும், ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. மன அழுத்தம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும், ஒரு வெறுமையை நீங்கள் உணருவீர்கள்.

அலுவலகப் பிரச்சினைகளையும் போட்டு குழப்பிக்கொள்வது, மேலதிகாரிகள் மரியாதையின்றி நடத்துவது, சக ஊழியர்கள் தோற்றம் பற்றி பேசுவது, எதிர்காலம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது.

மன அழுத்தம் என்றால் என்ன ?

பொதுவாக மன அழுத்தம், மாற்றங்கள், இழப்புகள், நிஜத்தை ஏற்க மறுக்கும் போது ஏற்படும் மன ரீதியான தாக்கங்களை மன அழுத்தம் வரும். மூளையில் சுரக்கும் வேதிப் பொருட்களின் குறைபாடால் மன அழுத்தம் ஏற்படும். உடலில் நோய்கள் உருவாக முக்கியமான காரணங்களில் ஒன்று மன அழுத்தம்.

மனஅழுத்தம் ஆண்களை விட பெண்களிடம் இரண்டு மடங்கு அதிகம் வெளிப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இவை அவர்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய நோயால் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

மனச்சோர்வின் அறிகுறிகள்:

மனநிலை மாறுதல், அடிக்கடி சோர்வு, கடந்தகால இன்பங்களில் ஆர்வம் இல்லாமை, வேலையில்லாமை, உதவியற்ற உணர்வு, விரக்தி, பயனின்மை, தூக்கம் குறைதல் அல்லது அதிகரித்தல், பசியின்மை குறைதல் அல்லது அதிகரித்தல் போன்றவை மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.இந்த அறிகுறிகள் மனச்சோர்வினால் பாதிக்கப்படும்பெண்களுக்கு குறைந்தது 2 வாரங்கள் இருக்கும்.

மனச்சோர்வுக்கான காரணங்கள்:

 உடற்கூறியல்  படி, ஒரு பெண்ணின் மூளை ஆணின் மூளையில் இருந்து வேறுபட்டது. பெண்களுக்கு உணர்ச்சிவச படுபவர்கள் அதிகம் தோன்றும். இதனால் ஆண்களை விட பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மூளையின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் ஒரு முக்கியமான ஹார்மோன். மாதவிடாய் சுழற்சியின் முதல் பாதியில், இது ஒரே மாதிரியாக இருக்கும். இதனால் மனச்சோர்வு பிரச்சனை இல்லை.ஆனால், மாதவிடாய் சுழற்சியின் 2 வது பாதியில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, ​​அது பெண்களை பற்றாக்குறை உண்டாகிறது.

மேலும் படிக்க... Black spots: முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி பொலிவு பெற...வீட்டில் தயாரிக்கும் இந்த ஒரு பேஸ் பேக்..

கர்ப்பகால பிரச்சனை:

பிரசவ வலியுடன் இருக்கும் தாய்க்கு, ஹார்மோன்கள் உற்பத்தியில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், கர்ப்பகால ஹேப்பி ஹார்மோன்களின் பணியையும் பாதிக்க, பெண்ணின் மனதில் மகிழ்ச்சி குறைந்து மன அழுத்தம் கூடுகிறது.அதே நேரம், பிறந்த குழந்தையின் பசிஅழுகையால் ஏற்படும் பெண்ணின் தூக்கத்தில் உருவாகும் மாறுபாடுகள் மற்றும் பசி மறந்த நிலை பெண்ணுக்கு ஒரு மன அழுத்த நிலையை தற்காலிகமாக உருவாக்குகிறது.

கருச்சிதைவு, கர்ப்பகாலத்தில் தொடர்ந்து சிகிச்சைகள் தேவைப்படும் நிலைகள், இரட்டைக் கர்ப்பம், செயற்கை முறை கருத்தரிப்பு, முந்தைய கர்ப்பத்தில் மனநிலை பாதிப்பு போன்றவை பிரசவத்திற்கு முன்னரே மன அழுத்தங்களைத் ஏற்படுத்தி, அதுவே போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷனுக்கும் காரணமாகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்