பேஸ்புக்கில் இணைந்த நண்பர்கள்..! "ட்ரெக்கிங்" செல்ல திட்டம் போட்டது இப்படி தான்...!

Mar 12, 2018, 1:10 PM IST



அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய 36 பேரில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் தெரிவித்து உள்ளார்

 தீ விபத்தில் இறந்தவர்களில் சென்னையை சேர்ந்த 6 பேர், ஈரோட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்  என்பது  குறிப்பிடத்தக்கது

 

இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில், 10 பேர் நலமாக உள்ளனர் என்றும், காயமடைந்த 17 பேரில், 5 பேர் தேனியிலும், 8 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக  வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்து  உள்ளார்.

இறந்தவர்கள் விவரம்:

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின், அகிலா, விஜயா, விவேவ், தமிழ்ச்செல்வி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தேனி ஆட்சியர் பல்லவி தெரிவித்து உள்ளார்.

இவர்கள் அனைவரும், பேஸ்புக் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு இணைந்தவர்கள் என்று கூறப்படுகிறது.மேலும் இதில் புதுமண தம்பதி விவேக் - திவ்யயாவும் சென்றுள்ளனர்.

இவர்கள் எடுத்த புகைப்படம் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.  மற்றவர்கள், ட்ரக்கிங் அழைத்து செல்லும் நிறுவனம் பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்துள்ளதால்,அதுவும் மகளிர் தின சிறப்பாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.

காரணமாக தான்,பெரும்பாலானவர்கள் பெண்கள் இடம் பெற்று உள்ளனர் என தெரியவந்துள்ளது.

 

முகநூல் நண்பர்கள் பெரும்பாலோனோர் இதில் ஆர்வம் காட்டியதால், இந்த  வாய்ப்பை பயன்படுத்தி சுற்றுலா சென்றவர்களுக்கு இப்படி ஒரு துயரம் நடந்துள்ளது.