நடிகர் தயாரிப்பாளர், முன்னாள் அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் சிரஞ்சீவி 40 ஆண்டுகளுக்கும் மேலாக டோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இதுவரை 150 படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்களில் ஒருவராகவும் இருக்கிறார். சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அதன்படி 2022-ம் ஆண்டு GQ அறிக்கையின் படி சிரஞ்சீவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1650 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள், விளம்பரங்கள், தொழில்கள், முதலீடுகள் ஆகியவற்றில் இருந்து அவருக்கு வருமானம் வந்து கொண்டு இருக்கிறது.
தெலுங்கு திரையுலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு அவரின் ஒவ்வொரு வெற்றி படங்களுக்கு பிறகும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சிரஞ்சீவிக்கு பல இடங்களில் ஆடம்பர பங்களாக்கள் உள்ளது.
ஹைதராபாத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களாவை அவர் வைத்திருக்கிறார். இதே போல் பெங்களூருவிலும் ஆடம்பர வீடு இவருக்கு சொந்தமாக உள்ளது.
சிரஞ்சீவி பல சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். ரூ.9 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ், ரூ.1.2 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ஓவர் வோக், ரூ90 லட்சம் மதிப்புள்ள டொயோடா லாண்ட் க்ரூஸர், ரூ.2.5 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட பல கார்களை அவர் வைத்துள்ளார். இவை தவிர கோடிக்கணக்கிலான பிரைவேட் ஜெட் ஒன்றையும் சொந்தமாக வைத்திருக்கிறார் சிரஞ்சீவி.
நடிகர் சிரஞ்சீவியின் அடுத்த படமான விஷ்வம்பரா படம் அடுத்த ஆண்டு திரையரங்கில் வெளியாக உள்ளது. சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான போலா சங்கர் தோல்வி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.