கிரிக்கெட் போட்டியில் முதல் பெண் நடுவர்..! வீரர்களுக்கு நடுவே வீர மங்கை..!

By ezhil mozhiFirst Published May 4, 2019, 4:18 PM IST
Highlights

கிரிக்கெட் போட்டிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மற்ற எந்த விளையாட்டிற்கும் இல்லாத வகையில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது கிரிக்கெட் போட்டியில் மட்டுமே.

கிரிக்கெட் போட்டியில் முதல் பெண்  நடுவர்..! வீரர்களுக்கு நடுவே வீர  மங்கை..! 

கிரிக்கெட் போட்டிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மற்ற எந்த விளையாட்டிற்கும் இல்லாத வகையில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது கிரிக்கெட் போட்டியில் மட்டுமே. இவ்வளவு பெரிய சவால்கள் நிறைந்த கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக ஒரு பெண் நடுவர் பங்கேற்க உள்ளார் என்றால் வியப்பாக உள்ளது அல்லவா?

ஆம் கிளாரி போலோசாக் என்ற பெண் ஆண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டியில் நடுவராக உள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற வேர்ல்ட் கிரிக்கெட் லீக் டிவிஷன் 2 தொடரின் இறுதிப்போட்டியில் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் மோதியது. இந்த விளையாட்டின்  போது கிளாரி நடுவராக இருந்தார். இதன் மூலம் ஆண்கள் விளையாடும் போட்டியில் பங்கேற்ற முதல் பெண் நடுவர் என்ற பெருமையை பெற்று உள்ளார்

இவருக்கு வயது 31 கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடுவராக பணியாற்றி வருகிறார். அதே ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய போட்டியில் முதன் முதலாக நடுவராக களம் இறங்கினார். இதுவரையில் 15 ஒருநாள் போட்டியில் நடுவராக இருந்துள்ளார். ஐசிசி நடத்திய பல தொடர்களிலும் பணியாற்றி வருகிறார் 2018ல் நடந்த பெண்கள் உலக கோப்பை டி20 அரையிறுதியிலும் நடுவராக பங்கேற்று உள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கும் போது, "பெண்களுக்கு வாய்ப்பு  வழங்கினால் தான், அவர்களின் திறமை வெளிவரும்.எவ்வளவு திறமை இருந்தாலும் வாய்ப்பு வழங்கவில்லை என்றால் அவர்கள் திறமையை இந்த உலகம் தெரிந்துகொள்ள முடியாமல் போகும் என தெரிவித்து உள்ளார். மேலும், ஆண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டியில் ஒரு நடுவராக நிற்பது என்பது சாதாரண விஷயம் அல்ல..என்றும் குறிப்பிட்டு பேசி உள்ளார். 

click me!