விடா முயற்சி விஸ்வரூப வெற்றி..! தந்தையும் மகளும் ஒரே நேரத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி...! குவியும் பாராட்டு..!

By ezhil mozhiFirst Published May 1, 2019, 4:36 PM IST
Highlights

புதுவையில் மகளும் தந்தையும் ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் நிகழ்ச்சி அடைய செய்துள்ளது. 

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி..! 

புதுவையில் மகளும் தந்தையும் ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் நிகழ்ச்சி அடைய செய்துள்ளது. 

புதுவை கூடம்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பொதுப்பணித் துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக இத்துறையில் அனுபவம் இருந்தாலும் கல்வித் தகுதி இல்லாததால் உயர் பதவிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனித் தேர்வு முறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அவர் மூன்று பாடங்களில்  மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தார். இந்நிலையில் தன்னுடைய மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்ததால் அவருடன் சேர்ந்தே படித்து  மற்ற இரண்டு பாடங்களையும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவருடைய மகள் 471 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தந்தை சுப்பிரமணியன் 2 பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் மகளும், தந்தையும் ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 

இதுகுறித்து சுப்பிரமணியம் தெரிவிக்கும் போது, "எனது மகள் எனக்கு சிறந்த முறையில் பாடம் எடுத்ததால்தான் என்னால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற முடிந்தது என்று பெருமையாக தெரிவித்து உள்ளார். மேலும் தன் மகள் தனக்கு ஒரு ஆசிரியையாக இருந்துள்ளார்" என பெருமிதம் பேசியுள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

click me!