காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்  பாதாமா? திராட்சையா? எதை சாப்பிட்டால் நல்லது?

By Kalai Selvi  |  First Published Aug 21, 2024, 7:30 AM IST

Health Care Tips : நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த திராட்சையை சாப்பிடுங்கள்.


தினமும் காலை வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும்? என்ற கேள்வி பெரும்பாலான மக்களின் மனதில் உள்ளது. ஊட்டச்சத்து தொடர்பான பல கட்டுக் கதைகள் மக்கள் மத்தியில் பரவி உள்ளது குறிப்பாக எடை இழப்பு எடை அதிகரிப்பு போன்ற தலைப்புகள் வரும்போது எதை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். இது குறித்து, முழு விளக்கம் நிபுணர்கள் நமக்கு வழங்கியுள்ளனர். எனவே, இந்த கட்டுரையில் இது குறித்து விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில், வாழைப்பழம், ஊறவைத்த பாதாம் அல்லது கருப்பு திராட்சையுடன் நாளை தொடங்கினால் ஆரோக்கியம் பலன் அளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

இந்த உணவுகளை யார் எந்த அளவு சாப்பிட வேண்டும் :

Tap to resize

Latest Videos

வாழைப்பழம் யாருக்கு நன்மை பயக்கும் :

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் அல்லது சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிட விரும்புபவர்கள் என அனைவருக்கும் வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தகையவர்கள் வாழைப்பழத்துடன் தங்கள் நாளை தொடங்குவது, அது அவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக வாரத்திற்கு 2-3  முறையாவது வாழைப்பழம் வாங்குங்கள் அவற்றை பிளாஸ்டிக் பைகளில் வைக்காமல், துணி பைகளில் வைத்து பயன்படுத்துங்கள். அதுமட்டுமின்றி, வாழைப்பழத்தில் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. அவை இதயத்தையும், சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

இதையும் படிங்க:  பாதாம் சாப்பிடும் சரியான வழி என்ன தெரியுமா? குழந்தைகள் முதல் பெண்கள் இப்படித்தான் சாப்பிடனும்..!!

ஊற வைத்த திராட்சை :

உங்கள் உடலில் ஆற்றல் குறைவாக இருப்பதை நீங்கள் உணர்ந்தால் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க விரும்பினால், ஊறவைத்த திராட்சையை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். அது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக பெண்கள், மாதவிடாய்க்கு 10 நாட்களுக்கு முன் ஊறவைத்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் அற்புதப் பலன்கள் கிடைக்கும். இதற்கு நீங்கள் 6-7 ஊற வைத்த திராட்சைகளை சாப்பிடலாம்.

ஊற வைத்த பாதாம் : 
உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு, சர்க்கரை நோய், பிசிஓடி, கருவுறுதல் பிரச்சனை மோசமான தூக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் நான்கு ஐந்து பாதாம் சாப்பிடுங்கள். பாதாமில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது இது தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக, பெண்கள், மாதவிடாய்க்கு 10 நாட்களுக்கு முன் ஊறவைத்த பாதாமை 4-6 சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, பாதாமில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை எடையை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இதையும் படிங்க:  Banana For Diabetes : சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

காலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடும் முன் இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்:

  • மேலே சொன்ன படி, நீங்கள் அவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், 10-15 நிமிடங்களுக்கு பிறகு தான் டீ அல்லது காபி குடிக்க வேண்டும்.
  • தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் சூடான நீர் குடித்துவிட்டு பிறகு தான் இவற்றை சாப்பிட வேண்டும் காலையில் எழுந்தவுடன் முதலில் செய்ய வேண்டியது தண்ணீர் குடிப்பது தான். தண்ணீர் குடிப்பது மூலம் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றது.
  • தண்ணீர் குடித்த பின் 20 நிமிடங்களுக்கு பிறகு தான் வாழைப்பழம் ஊறவைத்த பாதாம் திராட்சை ஆகியவற்றை சாப்பிட வேண்டும். உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் மாத்திரையை சாப்பிட்ட பிறகு சாப்பிடுங்கள்.
  • அதுமட்டுமின்றி இவற்றை சாப்பிட்ட பிறகு 15 20 நிமிடங்களுக்கு பிறகு தான் உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்ய வேண்டும்.
  • ஊறவைத்த திராட்சை தண்ணீரை குடிக்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!