Heel Pain Home Remedy : குதிகால் வலி வந்தால் எளிமையான முறையில் வீட்டிலேயே எப்படி குணப்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம்.
குதிகால் வலி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. இது காலில் ஏற்படும் பிற வலி மாதிரி கிடையாது. குதிகாலில் பிரச்சனை ஏற்பட்டால் காலை ஊன்றி நடக்க முடியாது. எந்த வேலையும் செய்ய இயலாது. பெரும்பாலும் பெண்களை இந்த பிரச்சனை தாக்குகிறது. சுமார் 35 வயதை கடக்கும் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் காரணமாக குதிகால் வலி வர வாய்ப்புள்ளது. இதற்கு சில பொதுவான காரணங்களும் உண்டு.
குதிகால் வலி காரணங்கள்:
1). அதிக நேரம் நிற்பது
2). பொருத்தமில்லா செருப்பு அணிதல்
3). ஊட்டச்சத்து குறைபாடு
4). உடல் பருமன்
5). செருப்பின்றி மோசமான தரையில் நடத்தல்
இதையும் படிங்க: Heel Pain: நிற்க முடியலையா? குடைச்சல் தரும் குதிகால் வலி; ஜம்முன்னு சரியான டிப்ஸ்!!
குதிகால் வலியை வீட்டிலே எவ்வாறு குணப்படுத்துவது?
குதிகால் வலிக்கு உப்பு ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு துணியில் கைப்பிடி கல் உப்பு எடுத்து மூட்டையாகக் கட்டி கொள்ளுங்கள். அதனை மிதமான சூடுள்ள வெந்நீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் வலி குறையும். ஒரு நாளுக்கு இருமுறை என தொடர்ந்து செய்ய வலி மறையும்.
உடற்பயிற்சி:
எலும்பு தேய்மானம் ஏற்படாமல் சில உடற்பயிற்சிகளை செய்து வந்தாலும் குதிகால் வலியை தடுக்கலாம். நாற்காலியில் அமர்ந்தபடி, காலுக்கு கீழ் சிறிய பந்தினை வைத்து அதை காலால் உருட்ட வேண்டும். முன்னும் பின்னுமாக இப்படி செய்வதால் அந்த இடம் மசாஜ் ஆகி வலி குறையும். இது தவிர கால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றிவிட்டு குதிகாலை தூக்கிவிட்டு மீண்டும் கீழே கொண்டு வர வேண்டும். இதை 10 முறை செய்யுங்கள்.
இதையும் படிங்க: தாங்க முடியாத குதிகால் வலி, வாதம், எரிச்சல் எல்லாமே ஒரு நொடியில் நீங்க பாட்டி வைத்தியம்..!
வீட்டு மருத்துவம்:
குதிகால் வலி குணமாக செங்கல் மற்றும் எருக்கு இலையை வைத்தும் ஒரு மருத்துவம் செய்வார்கள். முதலில் அடுப்பில் செங்கலை வைத்து மிதமாக சூடு செய்யுங்கள். பின்னர் எருக்கன் செடியில் உள்ள பழுத்த மஞ்சள் நிற இலையை அந்த செங்கல் மீது வைத்து அதன் மீது குதிகாலை வைக்க வேண்டும். கால் பொறுக்கக் கூடிய சூட்டில் இதை செய்தால் போதும். அதிக சூட்டில் வைத்தால் கொப்பளம் வரும். ஆகவே மிதமான சூட்டில் கொஞ்ச நேரம் குதிகாலை வைத்து விட்டு எடுத்துவிடுங்கள். வலி நிச்சயம் குறையும். தேவைப்பட்டால் மறுநாளும் செய்யுங்கள்.
நொச்சி இலை பொடியை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி நல்லெண்ணெய்யுடன் சூடுபடுத்துங்கள். மிதமான சூடு வரும்போது அதை எடுத்து குதிகாலில் தடவி ஒரு துணியால் கட்டி விடுங்கள். வலி மெல்ல குறையும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D