Watch | அவன் உசுரே நான் தான் தெரியுமா? பாருங்க புரியும்!

By Dinesh TG  |  First Published Aug 20, 2024, 12:30 PM IST

சகோதரர் தனது தங்கையை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது தெருநாய்களிடம் இருந்து காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்ணனின் பொறுப்பையும், தங்கையின் மீதான அன்பையும் கண்டு மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
 


அண்ணனும், தங்கையும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் கிளிப்பில் அண்ணன் தங்கையின் மீதான பொறுப்புணர்வு உணர்வைப் பார்த்து, அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பெற்றோர் இல்லாத நேரத்தில் ஒரு மூத்த சகோதரர் தனது கடமையை எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதை இதில் காணலாம்.

கர் கே காலேஷின் (@gharkekalesh) என்பவரது எக்ஸ் தள கணக்கில் பகிரப்பட்ட வீடியோவில், சகோதரனும் அவரது தங்கையும் பள்ளி உடை அணிந்து வீடு திரும்புவதைக் காணலாம். அந்த நேரத்தில், ரோடு முழுவதும் நாய்கள் அமர்ந்துள்ளன. அவ்வழியாகச் செல்வோரை பார்த்து நாய்கள் குலைப்பதையும் காணலாம். நாய்கள் எப்போது வேண்டுமானாலும் துள்ளிக்குதிக்கும் அபாயம் உள்ளதாக பள்ளி மாணவர்கள் ஏற்கனவே அறிந்துள்ளனர். அவன் செய்யும் முதல் காரியம் தன் கையில் ஒரு நீள குச்சியை எடுத்துக்கொண்டு, தங்கையை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்து வருகிறான். அப்பது, நாய்கள் கூட குச்சியைக் கண்டு ஒதுங்கிச் செல்கின்றன. இறுதியில் இந்த சகோதரர் தனது சகோதரியுடன் பாதுகாப்பாக பாதையை கடக்கிறார்.

 

Wholesome asf🥹❤️
pic.twitter.com/OMrKS2mBeB

— Ghar Ke Kalesh (@gharkekalesh)

Tap to resize

Latest Videos


சகோதர சகோதரி உறவு என்பது இந்தியாவில் மிகவும் புனிதமான உறவு

இந்தியா உட்பட உலகம் முழுவதும் ரக்ஷாபந்தன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழா தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும். சில காரணங்களால் சகோதர சகோதரிகள் ராக்கி நாளில் சந்திக்க முடியாமல் போனால், அடுத்த தேதியில் ராக்கி கட்டுவார்கள். இந்தியாவில் சகோதர சகோதரி உறவு மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. சிறுவயது சண்டைகள் எப்படி வலுவான பிணைப்பாக மாறும். இது ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் காணலாம்.

 

click me!