மாதம் ரூ.10 லட்சம்... புது வீடு... யூடியூப் சேனல் தொடங்கி சொகுசாக செட்டில் ஆன லாரி டிரைவர்!

By SG Balan  |  First Published Aug 19, 2024, 5:04 PM IST

ராஜேஷ் லாரி டிரைவராக மாதத்திற்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை சம்பாதிக்கிறார். ஆனால் யூடியூப் மூலம் ரூ.4-5 லட்சம் வரை வருமானம் வருகிறது. ஒரு மாதத்தில் ரூ.10 லட்சம் கூட கிடைத்துள்ளது.


20 ஆண்டுகளுக்கு மேலாக லாரி டிரைவராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ் ரவானி. சமையலில் ஆர்வம் கொண்ட ராஜேஷ், R Rajesh Vlogs என்ற யூடியூப் சேனலைத் தொடங்கி இப்போது மாதம் ரூ.5 லட்சம் வரை சம்பாதித்து வருகிறார். ராஜேஷ் ரவானியின் யூடியூப் சேனலுக்கு 1.86 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

சமீபத்திய ஒரு நேர்காணலில் பேசிய ராஜேஷ் தனது வருமான பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதில், தற்போது புதிதகா ஒரு வீட்டு கட்டி வருவதாகக் கூறினார். சமீபத்தில் ஒரு கடுமையான விபத்தில் தனது கையில் காயம் ஏற்பட்டு நூலிழையில் உயிர் பிழைத்ததையும் விவரித்துள்ளார். குடும்பத் தேவைகள் மற்றும் வீடு கட்டுமானப் பணிகள் நடப்பதால் தொடர்ந்து காயத்துடன் வாகனம் ஓட்டி வருவதாகவும் கூறியுள்ளார்.

Latest Videos

undefined

ராஜேஷ் லாரி டிரைவராக மாதத்திற்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை சம்பாதிக்கிறார். ஆனால் யூடியூப் மூலம் அவர் பெறும் வருமானம் பொதுவாக மாதம் ரூ.4-5 லட்சம் வரை உள்ளது. பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த வருவாய் மாறுபடும். ஆனால், அதிகபட்சமாக ஒரு மாதம் ரூ.10 லட்சம் ஈட்டி இருக்கிறார்.

1,2 இல்ல... 3 டிஸ்பிளே... மூணு விதமா மடிக்கலாம்!! ஹைப் கிளப்பும் ஹவாய் Tri-Fold மொபைல்!

தனது முதல் வைரல் வீடியோ எது என்றும் ராஜேஷ் நினைவுகூர்ந்தார். "நான் முதலில் என் முகத்தைக் காட்டாமல் வீடியோ வெளியிட்டு வந்தேன். மக்கள் பலர் என்னைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதனால், என் மகனை வைத்து ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டேன். அது ஒரே நாளில் 4.5 லட்சம் பேரால் பார்க்கப்பட்டது" என ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் பெரும்பாலும் சமையல் வீடியோக்களை வெளியிடுகிறார். லாரி டிரைவராக இருந்துகொண்டே யூடியூப் சேனலையும் நடத்த தனது குடும்பத்தின் ஆதரவு முக்கியக் காரணம் என்று ராஜேஷ் கூறுகிறார்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை 11:30 மணிக்கு வெளியிடப்பட்ட அவரது சமீபத்திய வீடியோவில், குவஹாத்திக்கு காரில் செல்லும் போது பீகார் வெள்ளம் பற்றி ராஜேஷ் பேசியுள்ளார். தான் இன்னும் 850 கிமீ தூரம் செல்ல வேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

வாட்ஸ்அப்பில் வதவதன்னு வந்து குவியும் ஸ்பேம் மெசேஜ்... முற்றுப்புள்ளி வைக்கும் புதிய அப்டேட்!!

click me!