எப்போது காபி அருந்துவது உடலுக்கு நன்மைகளை தரும் என்பது குறித்தும், எப்போது காபியை அருந்தக் கூடாது என்றும் இங்கு காணலாம்.
உலகம் முழுக்க காபி பிரியர்கள் இருக்கின்றனர். காபி குடிக்காமல் சிலருக்கு நாட்களே நகராது. எவ்வளவு தான் காபியை விரும்பினாலும் அதனை அளவாக குடிப்பது தான் உடலுக்கு நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல காபியை அளவுக்கு அதிகமாக குடிப்பவர்களுக்கு உடலில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இருந்தாலும் காபியை சரியான நேரத்தில் அருந்துவதால் உங்களுக்கு நன்மைகளும் உண்டு. காலை, மதியம், மாலை அல்லது இரவில் காபி அருந்துவதால் வெவ்வேறு நன்மைகள் கிடைக்கும்.
சிலர் காலையில் புத்துணர்வாக உணர காலை உணவுக்கு பின் காபி அல்லது டீ அருந்துவார்கள். இது மாதிரி காலையில் காபி அருந்துவதால் உள்ளமும் உடலும் புத்துணர்வாகும். காபியில் இருக்கும் காஃபின் மூளையின் அடினோசின் ஏற்பியை தடுக்கும். ஏற்பிகளைத் தடுக்கிறது. இதனால் தூக்கம் தவிர்க்கப்படும். காபி அருந்தினால் அது உடலுக்கு ஆற்றல் தரும். இதனால் வேலைகளை விரைந்து முடிக்கலாம். காலையில் தூங்கி எழுந்த உடனே காபி அருந்தினால், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவு சமநிலையில் வைக்க உதவும். ஒரு நாளில் 1 அல்லது 2 கப் காபி அருந்தினால் இதய நோய் அபாயம் குறையும்.
இதையும் படிங்க: Parenting Tips : குழந்தைகளுக்கு டீ, காபி கொடுக்க சரியான வயது எது தெரியுமா? பெற்றோர்களே அவசியம் தெரிஞ்சுக்கோங்க
வயிறு நிறைய மதிய உணவு எடுத்து கொண்ட பின்னர் கொஞ்சம் தூங்கினால் நன்றாக இருக்கும் என தோன்றும். அலுவலகங்களில் இவ்வாறு செய்ய முடியாது. இந்த மாதிரி நேரத்தில் காபி உற்ற தோழனாக இருக்கும். காபி குடித்துவிட்டு வேலையை தொடரலாம். மதியம் காபி அருந்தினால், மனம் உற்சாகமாக இருக்கும். உங்களுடைய உற்பத்தித் திறனும் அதிகமாகும். இதே காரணத்திற்காக அடிக்கடி காபி குடிப்பது தவறு. அதிகப்படியாக காஃபின் எடுத்து கொள்வது நடுக்கத்தை ஏற்படுத்தலாம். இரவில் தூங்கம் வராமல் சிரமம் ஏற்படலாம். மதிய வேளையில் ஒரு கப் காபி மட்டுமே அருந்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: முகம் கண்ணாடி மாதிரி பளபளக்க வேண்டுமா? காபி பொடியில் 'இந்த' பொருட்களை கலந்து ஸ்கரப் பண்ணுங்க..
மாலையில் காபி அருந்தினால் நன்மை கிடைப்பது போல தீமையும் உண்டு. பகலில் அடிக்கடி காபி அருந்துவதால் இரவில் தூக்கமின்மை ஏற்படும். நம் உடலில் உள்ள காஃபினை நீக்க 5 முதல் 6 மணி நேரம் ஆகும். மாலையில் காபி குடிப்பவர்களுக்கு கண்டிப்பாக இரவு தூக்கம் பாதிக்கும். அதனால் மாலையில் குடிப்பதை தவிர்க்க பாருங்கள். மாலை மட்டுமல்ல, இரவிலும் காபி அருந்தக் கூடாது. இரவு நேரத்தில் வேலையில் ஈடுபடுபவர்கள் அல்லது இரவில் தூங்காமல் விழித்திருக்க நினைப்பவர்கள் இரவில் காபி குடிக்கலாம்.
காலையில் காபியை அருந்தினால் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். அந்த நாளையே சுறுசுறுப்பாக மாற்றிவிடும். மதிய வேளையில் காபி அருந்துவதால் களைப்பு நீங்கும். மாலை நேரத்தில் குறைந்த அளவில் காபி குடிக்கும் போது அது இரவு தூக்கத்தை பாதிப்பதில்லை. ஆனால் இரவில் காபி அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D