Weight Loss Tips : நாம் உண்ணும் சாப்பாட்டில் உப்பை குறைப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என சொல்லப்படுவது உண்மையா? இல்லையா? என்பது குறித்த மருத்துவரின் விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.
உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான முயற்சியை எடுக்கின்றனர். சிலர் தங்களுடைய உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்கின்றனர். சிலர் உடற்பயிற்சிகளை அதற்கான வழியாக தேர்ந்தெடுக்கின்றனர். சிலர் விரைவான முறையில் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர். விரைவாக உடக் எடையை குறைக்க வேண்டும் என்று ஆபத்தான வழிகளை தேர்வு செய்கின்றனர்.
சமீப காலங்களில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் உடல் எடை குறைப்பு குறித்து பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. 'நோ சுகர் சேலஞ்ச்', 'கட் த சால்ட்' போன்ற வீடியோக்கள் எடையை குறைக்க விரும்புவரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எடையை குறைக்க நினைப்பது ஆரோக்கியத்தை நோக்கிய பயணத்தில் முதல் அடி. ஆனாலும் அந்த பயணத்தில் உணவில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள், தாதுக்களை ஒதுக்குவது தவறு. சில டயட் நமக்கு தொடக்கத்தில் கடகடவென எடையை குறைக்க உதவும். அதுவே ரொம்ப காலம் நல்ல முடிவுகளை தராது. மீண்டும் பழைய எடைக்கு வந்துவிடுவீர்கள். அப்படி தான் எடையை குறைக்க சிலர் உப்பை தவிர்க்க நினைக்கிறார்கள். நம்முடைய உணவில் உப்பை குறைப்பதால் உடல் எடை குறையுமென்பது உண்மையா என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 1 வாரம் உப்பு சாப்பிடுவது நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் படிங்க..!
உப்பு என்பது சோடியமும் குளோரினும் கலந்த சேர்மம். இதனை உணவில் சேர்ப்பதால் தான் நம் உடலில் திரவ சமநிலை அடைகிறது. நமது தசை செயல்பாட்டில் உப்புக்கு முக்கிய பங்குள்ளது. இருந்தபோதும், நாம் உப்பை அதிகமாக எடுத்து கொண்டால் அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை வர காரணமாகிவிடும். நீங்கள் எடையை குறைக்க உப்பு உங்களுக்கு உதவும். இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது, நாள் முழுக்க உப்பின்றி உணவு எடுத்து கொள்வதை காட்டிலும், இரவில் மட்டும் உப்பை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள். உப்பு இல்லாமல் உணவு உண்ணும்போது உடலில் நீர் இழப்பு ஏற்படுகிறது. இது எடையைக் குறைக்க உதவுகிறது.
இதையும் படிங்க: நீங்க எடையை குறைக்க விரும்புகிறீர்களா? அப்ப இந்த 3 பழங்களை அதிகம் சாப்பிடாதீங்க!!
உப்பு உடலுக்கு அவசியமான ஒன்று. உப்பில்லாமல் சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முயற்சி செய்வதை விட இரவில் 7 மணிக்கு முன்பாக சாப்பிடுவது சிறந்தது. இரவு உணவை முன்கூட்டியே எடுத்துக் கொள்வது செரிமானத்திற்கு உதவும். நீர்ப்பிடிப்பு, வீக்கத்தை தீர்க்க இதுவே சிறந்த வழி.
உப்பு எடையை அதிகப்படுத்தாது. நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் பகலில் உப்பை தவிர்ப்பதை விட மாலையில் உப்பைக் குறைப்பது தான் எடை குறைப்பில் உதவும். ஏனெனில் இரவில் தான் வளர்சிதை மாற்றம் மெதுவாக இருக்கும். அதனால் இரவு செரிமானத்திற்கு கடினமான எந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
இரவில் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்களை சாப்பிடலாம். பழங்கள் சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். பொறித்த உணவுகளை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்கிறார்கள் நிபுணர்கள்.