August 16 in History : வரலாற்றில் இந்த ஆகஸ்ட் 16ம் தேதி உலகையே உலுக்கிய சில பயங்கர விமான விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
வான்வழி பயணங்கள் எந்த அளவுக்கு ஒரு மனிதனின் நேரத்தை மிச்சப்படுத்துகிறதோ, அதே அளவுக்கு ஒரு மனிதனின் வாழ்க்கையை வெகு சில வினாடிகளில் கேள்விக்குறியாகவும் மாற்ற ஒரு சில வாய்ப்புகள் உள்ளது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. உலக அளவில் பல கோடி விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அவை அனைத்துமே மிக நேர்த்தியான விமான ஓட்டிகளால் தான் இயக்கப்படுகிறது.
இருப்பினும் ஒரு சில சமயங்களில் பெருத்த அசம்பாவிதங்கள் இந்த விமான பயணத்தில் நடப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இதே ஆகஸ்ட் 16ம் தேதி கடந்த 1987ம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருந்து புறப்பட்டது ஒரு "நார்த் வெஸ்ட் ஏர்லைன்ஸ்" நிறுவனத்தின் விமானம். இந்த விமானம் சுமார் 155 பயணிகளோடு புறப்பட்ட நிலையில், நிலத்தை விட்டு மேலேறிய சில நிமிடங்களில் இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் விமான நிலையம் நோக்கி விழ தொடங்கியது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 154 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு, அப்பொழுது விமான ஓடுதளத்தில் பணியில் இருந்த இருவரும் அதில் சிக்கி உயிரிழந்தனர்.
வியட்நாமுக்கு முதல் முறையாக டூர் போறீங்களா.. மிஸ் பண்ணக்கூடாத இடங்கள் என்ன?
அதேபோல இதே ஆகஸ்ட் 16ம் தேதி கடந்த 1991ம் ஆண்டு மணிப்பூர் இம்பால் விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது ஒரு இந்திய ஏர்லைன்ஸ் விமானம். போயிங் 737-200 ரக விமானமான அது, இம்பால் விமான நிலையத்தை நெருங்கும் போது தனது கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக தரையில் வந்து மோதியது. இந்த விபத்தில் 69 பேர் உடல் கருகி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2005ம் ஆண்டு வெனிசுலா பகுதியில், வெஸ்ட் கரீபியன் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று சுமார் 160 பயணிகளோடு பயணித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது ஏற்பட்ட ஒரு இயந்திர கோளாறு காரணமாக அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதில், அந்த விமானத்தில் பயணம் செய்த 160 பேரும் காலமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
ரோடும் இல்ல, தண்டவாளமும் இல்ல; ஆனாலும் உலகின் 12வது பெரிய நாடு பற்றி தெரியுமா?