1 வாரம் உப்பு சாப்பிடுவது நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் படிங்க..!
Salt Effects : உப்பை அதிகம் சாப்பிடுவதும் நல்லதல்ல. அதே சமயம் அதை முழுவதுமாக கைவிடுவதும் தவறு. அந்த வகையில், ஒரு வாரம் உப்பை முழுவதுமாக கைவிட்டால், உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
'உப்பிலாத உணவை குப்பைக்கு சமம்' என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆம், அது உண்மைதான். ஏனெனில், உப்பு தான் உணவின் முக்கிய அங்கமாகும். இதுதான் உணவின் சுவை அதிகரிக்கும்.
உப்பை அதிகம் சாப்பிடுவதும் நல்லதல்ல. அதே சமயம் அதை முழுவதுமாக கைவிடுவதும் தவறு. ஒட்டுமொத்தமாக நீங்கள் அதை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதே மிகவும் நல்லது.
அந்த வகையில், ஒரு வாரம் உப்பை முழுவதுமாக கைவிட்டால், உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்பதற்கான பதில் இதோ.
அதிக அளவு உப்பு எடுத்துக் கொண்டால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், சிறுநீரகப் பிரச்சனைகள், வீக்கம், தலைவலி மற்றும் நீரிழிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சிலர் அதிக உப்பை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை அறிந்த பிறகு அதை முற்றிலும் நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் இப்படி செய்வது மரணத்திற்கு சமம் என்கின்றனர் நிபுணர்கள்.
உப்பில் இருக்கும் மிக முக்கியமான தனிமம் சோடியம். இதன் குறைபாடு உடலில் பல நோய்களை உண்டாக்கும். ஏனெனில், சோடியம் தான் நம் உடலில் சரியான நீரின் அளவை பராமரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி, உடலின் மற்ற பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனை இது கொண்டு செல்லும்.
திடீரென நீங்கள் ஒரு வாரம் உப்பு சாப்பிடவில்லை என்றால், இரத்தத்தில் சோடியம் அளவு குறைய தொடங்கும். இதனால் உடலில் அதிகப்படியான நீர் தேங்க தொடங்கும். இதனால் தலைவலி, குமட்டல், சோர்வு போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்வீர்கள்.
உடலில் சோடியம் இல்லாததால் எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும். அதேசமயம் குப்பை நிறுத்துவது சில நபர்களுக்கு குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி செரிமானத்திற்கு உப்பு உதவுகிறது. நீங்கள் ஒருவருக்கு சாப்பிடவில்லை என்றால், மலச்சிக்கல் அல்லது பிற செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.