- Home
- Gallery
- முகம் கண்ணாடி மாதிரி பளபளக்க வேண்டுமா? காபி பொடியில் 'இந்த' பொருட்களை கலந்து ஸ்கரப் பண்ணுங்க..
முகம் கண்ணாடி மாதிரி பளபளக்க வேண்டுமா? காபி பொடியில் 'இந்த' பொருட்களை கலந்து ஸ்கரப் பண்ணுங்க..
Coffee Face Scrub Benefits : உங்கள் முகம் பொலிவிழந்து காணப்பட்டால், காபி தூளுடன் சில பொருட்களை சேர்த்து ஸ்க்ரப் செய்தால் முகம் பிரகாசமாக மாறும் மற்றும் பளபளப்பாகும்.
பெரும்பாலான மக்கள் ஒரு கப் காபியுடன் தங்கள் நாளை தொடங்குவார்கள். காபி உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் தெரியுமா?
இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது அலர்ஜி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது தோலில் இருந்து வீக்கம் போன்ற பிரச்சனைகளை நீக்கவும், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளை அகற்றவும் பெரிதும் உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், காபி தூள் உடன் சில பொருட்களை சேர்த்து ஸ்க்ரப் தயாரித்து, அதை முகத்தில் தடவினால் முகம் பொலிவாகும். அவற்றை குறித்து இங்கு பார்க்கலாம்.
முகம் பொலிவாக காப்பிட்டுள் ஸ்க்ரப்கள்:
தயிர் மற்றும் காபித்தூள்: இந்த ஸ்க்ரப் தயாரிக்க முதலில், ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் காபித்தூள் மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும், பிறகு அதே முகத்தில் தடவி, 15 நிமிடம் மசாஜ் செய்யவும். நன்கு காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் காபித்தூள்: இந்த ஸ்க்ரப் தயாரிக்க முதலில் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் காபித்தூள் மற்றும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்து பிறகு, 15 நிமிடம் ஊற வைக்கவும்.. பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இறுதியாக மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: Skin Care : சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள காபி பேஸ்பேக்கை ட்ரை பன்னுங்க!
தேன் மற்றும் காபித்தூள்: இந்த ஸ்க்ரப்ட் தயாரிக்கும் முதலில், ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் காபித்தூள் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்து நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள்.
இதையும் படிங்க: உங்கள் முகம் கருப்பா இருக்கா? கவலைப்படாதீங்க..வெள்ளையாக மாற இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு உதவும்..!!
வாழைப்பழம் மற்றும் காபித்தூள்: இந்த ஸ்க்ரப் தயாரிக்க முதலில் ஒரு கிண்ணத்தில் நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து, அதை நன்கு மசாஜ் மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் காபித்தூள் மற்றும் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி பத்து நிமிடம் நன்கு காய வைக்கவும். பிறகு சிறிது நேரம் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த ஸ்க்ரப்பை வாரம் ஒரு முறை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D