Pimples On Your Face : முகத்தில் ஒவ்வொரு இடத்தில் உள்ள பருக்களும் வேறு வேறு காரணங்களுக்காக தோன்றுகின்றன. அது ஏன்? அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இங்கு காணலாம்.
முகத்தில் உள்ள பருக்களை வைத்து நம் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள முடியும். அந்த காரணங்களை தெரிந்து கொண்டால் மட்டுமே அவற்றை நீக்குவதற்கு சரியான வழியை தேர்வு செய்ய முடியும்.
மேல் நெற்றி :
தொடர்ந்து தலைக்கு குளிக்காமல் இருந்தால் தலைமுடியில் உள்ள எண்ணெய் முகத்தில் படிய தொடங்கும். இது நெற்றியில் பருக்களை ஏற்படுத்தும். சிலருக்கு முகப்பரு வருவதற்கு அவர்களுடைய தலை முடி வளர்ச்சிக்காக பயன்படுத்தும் பொருட்கள் காரணமாக இருக்கலாம். ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம் ஆகியவையும் நெற்றியில் பரு வர காரணம். செரிமான கோளாறுகளாலும் நெற்றியில் பருக்கள் வரலாம். தண்ணீர் அதிகம் குடியுங்கள். காபி, குளிர்பானங்களை அறவே தவிருங்கள். மஞ்சள், கருநீலம், ஆரஞ்சு, சிவப்பு வண்ண காய்கறிகளை உணவில் சேருங்கள்.
கீழ் நெற்றி :
உங்களுடைய புருவங்களுக்கு மேலாக பருக்கள் தென்பட்டால் உங்கள் தூக்கம் போதுமானதாக இல்லை என அர்த்தம். இங்கு பரு வந்தால் மூளை மற்றும் மனதை ரிலாஸ்க்ஸ் செய்யுங்கள். மனச்சோர்வு நீங்கினால் பருவும் நீங்கும். ஒரு வாரத்தில் 3 முதல் 5 நாள்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் நன்கு தூங்குங்கள்.
இதையும் படிங்க: Beauty Tips : ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் மறைய புதினா இலை ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!
புருவங்களுக்கு இடையில் :
இருபுருவங்களுக்கு மத்தியில் பருக்கள் வருவது கல்லீரல் பிரச்சனைகளை குறிக்கும். இது நம்முடைய உணவு பழக்கத்தை மாற்ற சொல்லும் அறிகுறி. மது குடிப்பவர்களுக்கு, அதிக கொழுப்புள்ள உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்கு புருவங்களுக்கு மத்தியில் பருக்கள் வரும். உணவின் ஒவ்வாமையும் காரணமாக இருக்கலாம். கடினமான உணவுகளை தவிர்த்து பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகம் உண்பதால் தவிர்க்கமுடியும்.
தாடை :
இந்த இடங்களில் உள்ள பருக்களுக்கு காரணம் ஹார்மோன்கள் மாற்றம் தான். அதிகப்படியாக ஆண்ட்ரோஜன்கள் அல்லது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பது முகப்பருவை ஏற்படுத்துகின்றன. நார்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், பீன்ஸ், கீரை மாதிரியான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவு பழக்கம் தேவை.
இதையும் படிங்க: Beauty Tips : ஓரே இரவில் முக பரு மறைய தேங்காய் எண்ணெயுடன் 'இத' கலந்து முகத்தில் தடவினால் போதும்!
கன்னங்கள் :
கன்னங்களில் பருக்கள் வந்தால் நீங்கள் அதிக சர்க்கரை சாப்பிடுவதன் அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்ப்பதால் முகப்பரு குறையும். கன்னங்களில் முகப்பரு வருவதைத் தடுக்க செல்போனை முகத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும். போனில் படிந்துள்ள கிருமிகளாலும் பருக்கள் வரலாம். கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது மொபைலை துடைக்க மறக்காதீர்கள். தலையணை உறையை வாரம் ஒருமுறையாவது துவைத்து சுத்தமாக பயன்படுத்துங்கள்.
மூக்கு :
மூக்கில் பருக்கள் வந்தால் இதயம் சார்ந்த பிரச்சனை அல்லது ரத்த அழுத்தம் சீராக இல்லை என அர்த்தம். இதை சரி செய்ய மன அழுத்தமின்றி இருக்க வேண்டும். தியானம் செய்வது நல்லது. மனம் விரும்பும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.