வேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..?

First Published Jul 18, 2018, 7:29 PM IST
Highlights
dont obstruct the urine in the bladder it leads problem


வேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..?

பொதுவாகவே ஆத்திரத்தை கூட அடக்கி விடலாம் ஆனால் மூத்திரத்தை அடக்கி வைக்க முடியாது என்பார்கள்.

இதையும் தாண்டி வேலைப்பளு, பயணம் மேற்கொள்ளும் சமயம், வகுப்பறை நேரங்கள் இது போன்ற சமயத்தில் ஒரு சிலர் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்வார்கள்...

இவ்வாறு செய்தால் எந்த விதமான பிரச்சனை வரும் என்பதை  பார்க்கலாம்.

அடி வயிறு வலி

அடி வயிற்றில் அதிக வலி ஏற்படும்...ஒரு விதமான அசௌகரியம் ஏற்படும்.

வேலையில் கவனம் இல்லாமை..!

வேலை நேரத்தில் சில பல காரணத்தால் தொடர்ந்து சிறுநீர்  கழிக்காமல் அடக்கி வைக்கும் போது, வேளையில் கவனம் சிதறும் நிலை ஏற்படும்....

சிறுநீர் தொற்று மற்றும் சிறுநீரகம் பாதிப்பு

அதிகம் நேரம் சிறுநீர் அடக்கி வைப்பதால் அதிக தோற்று  ஏற்படும். ஒரு விதமான கிருமிகள் உண்டாகி அது உடல் முழுதும்  மேலும் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

இதே நிலை தொடரும் தருணத்தில், கண்டிப்பாக சிறுநீர் பிரச்சனை ஏற்பட்டு பாதிப்படைய செய்யும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடலில் உள்ள மற்ற உடல் உறுப்புக்கள் செயல் இழந்தால் மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளள வாய்ப்பு உள்ளது.

ஆனால் சிறுநீரகம் பாதிப்பு அடைந்து விட்டால் மிகவும் சிரமமானதாக அமையும்.

click me!