இந்த தினத்தில் கடன் கொடுத்தால் நஷ்டம் மேல் நஷ்டம் அடைந்து குடும்பம் ஊசலாடும் நிலைக்கு தள்ளப்படுமாம்...!

By ezhil mozhiFirst Published Apr 28, 2019, 4:49 PM IST
Highlights

கடன் அன்பை முறிக்கும் என்பார்கள். அதனையும் மீறி ஒரு சிலர் கடன் கொடுப்பதும் வாங்குவதுமாக இருப்பார்கள். ஒரு சிலர் கடன் வாங்கி  சென்றாலே போதும் திரும்ப வந்து என்ன தரவா போறோம் என  ஆரம்பத்திலேயே கேடு கேட்ட எண்ணத்தோடு வாங்கி செல்வார்கள். 

ஒரு சிலர் சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு தக்க சமயத்தில் உதவி செய்தவருக்கு, சொன்ன தேதியில் பணத்தை திரும்ப கொடுப்பார்கள். இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாளில் பணத்தை கடனாக கொடுத்தால் கண்டிப்பாக அது திரும்பி நமக்கு கிடைக்காதாம். அந்த நாட்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம் வாங்க.

லக்கனம் எதுவாக இருந்தாலும், சனி திசை, சனி புத்தியில் கடனாக கொடுத்த பணம் திரும்ப வராதாம். அதே போன்று ஏழரை சனியில், விரய சனியில் கொடுத்த பணமும் கோவிந்தா கோவிந்தா ..! பொதுவாக செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை கடன் கொடுக்க கூடாது என்பார்கள். ஆனால், கடனை அடைக்க செவ்வாய்க்கிழமை ஏற்றநாள் தான்.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், வெள்ளிக்கிழமை, சுவாதி நட்சத்திரத்தில் கொடுத்த கடன் கண்டிப்பாக நமக்கு திரும்ப கிடைக்கவே கிடைக்காதாம். எனவே நாள் நட்சத்திரம் பார்த்து கடன் கொடுக்கலாம். அதே சமயத்தில் தக்க நேரத்தில் பண உதவி செய்வதிலும் தவறு என்று சொல்லிவிட முடியாது. 

click me!