ஆடி மாதம் பிறந்து விட்டது ..! செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க...!

First Published Jul 17, 2018, 5:04 PM IST
Highlights
dont forget to do this on tuesday of adi month


இன்று ஆடி மாதம் பிறந்து உள்ளது. புதுமண தம்பதிகளுக்கு தான் கொஞ்சம் கவலையாக இருக்கும்.ஆனால் இதே ஆடி மாதம் பெண்கள் விரதம் இருக்க எவ்வளவு சிறந்த மாதம் தெரியுமா..?

ஆடி மாதம் எது போன்ற விரதம் இருந்தால் நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க...

ஆடி மாதம் என்றாலே ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்று, பெண்கள் மிக முக்கிய விரதத்தை கடைப்பிடிக்க  வேண்டும்..அதாவது, பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்க  வேண்டும்...

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மஞ்சள் தேய்த்து குளித்து, பின்னர் மாரி அம்மனை வணங்க வேண்டும்...

இதற்காக காலை மற்றும் மதியம் இருவேளை விரதம் இருந்து மாலை நேரத்தில் சிற்றுண்டி எடுத்துக் கொள்ளலாம்

மேலும் அவ்வப்போது பெண்கள் வேப்பிலையின் ஒரு இலையை உண்டால் மேலும் நல்லது.மாலை நேரத்தில் மாரி அம்மன் கோவிலுக்கு சென்று, மஞ்சள் அபிஷேகம் செய்து  வந்தால் ஆக சிறந்தது

செவ்வாய் என்றாலே செல்வம் அழகு முருகன் என  இப்படி  எதை வேண்டுமானாலும் சொல்லலாம்

இந்த விரதம் இருப்பதால், செல்வ கடாட்சம் அதிகரிக்கும்

குழந்தை வரம் கிடைக்கும்

திருமண வரன் அமையும்

சுமங்கலி பாக்கியம் பெருகும்

ஆடி மாதம் ஆசிர்வாதம் கிடைக்கும்....

ஔவையார் விரதம்

இது போன்று பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்தை ஔவையார் விரதம் என்று கூட கூறுவார்கள்.

நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் தொட்டு இந்த பழக்கம் இன்றளவும் நடைமுறையில் தான் உள்ளது.

ஆனால் இன்று மாறி வரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப, மக்கள் பயம் பக்தியுடன் கடவுளை வணங்குவதை கூட சரி வர கடைப்பிடிக்காத ஒரு சூழல் கூட உள்ளது என்றே கூறலாம்.

ஆனால்  இந்த பூஜைகளில் பெண்கள் ஈடுபடும்போது எதிர் மறை எண்ணங்கள் நீங்கி. நேர்மறை எண்ணங்கள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!