செரிமான பிரச்சனையா? அப்ப கண்டிப்பா இந்த 5 பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்..

By Ramya s  |  First Published Jul 24, 2023, 8:22 AM IST

சிறந்த செரிமானத்திற்காக உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய பழங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


பழங்கள் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக, சில பழங்களை சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவும். ஆரோக்கியமற்ற செரிமான அமைப்பு மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வாயு போன்ற பல்வேறு சங்கடமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிர்ஷ்டவசமாக, ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவும் பல சுவையான பழங்கள் உள்ளன. சிறந்த செரிமானத்திற்காக உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய பழங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆப்பிள்: ஆப்பிளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உங்கள் செரிமான அமைப்பைச் சரியாகச் செயல்பட வைக்க உதவுகிறது. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவும். மேலும் ஆப்பிளில் உள்ள பெக்டின் உங்கள் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது, இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Tap to resize

Latest Videos

எச்சரிக்கை : இந்த உண்மை மட்டும் தெரிஞ்சா...இனி உங்க குழந்தைகளுக்கு டீ காபி கொடுக்க மாட்டீங்க..!

வாழைப்பழம்: நார்ச்சத்துக்கான மற்றொரு சிறந்த ஆதாரம் வாழைப்பழம் ஆகும். அவை மலச்சிக்கலைக் குறைக்க உதவுவதோடு, சரியான செரிமானத்திற்கு முக்கியமான பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகவும் இருக்கும். மேலும், வாழைப்பழத்தில் உள்ள ப்ரீபயாடிக்குகள், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க அவசியம்.

அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் என்ற நொதி உள்ளது, இது புரதங்களை உடைத்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்க உதவுகிறது. இந்த நொதி குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும், இது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியின் (IBS) அறிகுறிகளைக் குறைக்கும். மேலும், அன்னாசிப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது, இவை இரண்டும் உங்கள் செரிமான அமைப்பை சரியாக செயல்பட வைக்க உதவும்.

பட்டர் ஃப்ரூட்: இதயத்திற்கு ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் பட்டர் ஃப்ரூட்டில் அதிகம் உள்ளது. மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் குடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைக் குறைக்க உதவும். மேலும் இதில் உள்ள ப்ரீபயாடிக்குகள் உள்ளன, அவை குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டும்.

சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி மற்றும் உணவு நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்கள். வைட்டமின் சி வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுவதுடன், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மேலும், இந்த பழங்களில் உள்ள உணவு நார்ச்சத்து உமலச்சிக்கலை குறைக்கிறது.

Silent Heart attack : அறிகுறிகளே தெரியாது.. கவனிக்கவில்லை எனில் உயிருக்கே ஆபத்து?

click me!