பாம்பின் கண்களை விடாமல் கொத்தும் பறவை.. தப்பித்து ஓடும் பாம்பு.. வைரல் வீடியோ..

Published : Jul 22, 2023, 11:07 AM IST
பாம்பின் கண்களை விடாமல் கொத்தும் பறவை.. தப்பித்து ஓடும் பாம்பு..  வைரல் வீடியோ..

சுருக்கம்

சமீபத்தில், ஒரு பறவை விஷ பாம்பை தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக விலங்குகளின் குறும்புத்தனமான செயல்கள் அல்லது விலங்குகள் சண்டையிடும் வீடியோக்கள் லைக்-களை குவித்து வருகின்றன. அவற்றில் சில மனதைக் கவரும் வகையில் இருந்தாலும், சில வீடியோக்கள் கொடூரமானதாகவும் இருக்கலாம்.

அந்த வகையில் சமீபத்தில், ஒரு பறவை விஷ பாம்பை தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயன்ற பச்சைப் பாம்பை, பறவை ஒன்று தொடர்ந்து தாக்குவதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. குறிப்பாக அந்த வீடியோவில், பறவை பாம்பின் கண்களைத் தாக்குவதைக் காணலாம். பாம்பின் கண்ணை தொடர்ந்து தாக்குவதால், அதிலிருந்து இரத்தம் வெளியேறத் தொடங்குகிறது. 

 

வீடியோ பதிவேற்றப்பட்டதில் இருந்து 25.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. சிலிர்க்க வைக்கும் வீடியோவைப் பார்த்து சமூக ஊடக பயனர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் காணப்படும் பாம்பு, Boomslang என்று அழைக்கப்படும் ஒரு விஷ மர பாம்பு. மேலும் பாம்பை தாக்கும் அந்த பறவை Bushshrikes என்ற பறவைகள் தங்களுக்குக் கிடைக்கும் எதையும் சாப்பிடுமாம். மேலும் வாய்ப்பு கிடைத்தால் பாம்புகளைக் கொல்லும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு இந்த வீடியோவை விட சிறந்த ஆதாரம் இருக்குமா என்ன?

குழந்தைகளிடையே அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டியவை என்ன?

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Bread Omelette for Breakfast : காலை உணவாக பிரட் ஆம்லெட் சாப்பிட்டுறது நல்லதா? தொடர்ந்து சாப்பிடுவறங்க இதை கவனிங்க
Push-Ups : இந்த '1' உடற்பயிற்சியை தினமும் காலைல பண்ணாலே 'உடலில்' பல மாற்றங்கள் வரும்