"U " டர்ன் போட்ட ஃபானி புயல்..! புயல் வருது புயல் வருதுன்னு சொல்லி சொல்லியே புஸ்ஸுன்னு போச்சு...! ஏப்ரல் மாதத்தில் "ஏப்ரல் ஃபூல்"..!

By ezhil mozhiFirst Published Apr 28, 2019, 3:58 PM IST
Highlights

நாளை அதாவது 29ஆம் தேதி புயல் சின்னம் உருவாகும் என்றும் அதனால் தமிழகத்திற்கு அதிக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

புயல் வருது புயல் வருதுன்னு சொல்லி சொல்லியே புஸ்ஸுன்னு போச்சு..!

நாளை அதாவது 29ஆம் தேதி புயல் சின்னம் உருவாகும் என்றும் அதனால் தமிழகத்திற்கு அதிக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 30 மே 1, 2 தேதிகளில் red alert எச்சரிக்கையும் விட்டிருந்தது.

இதற்கிடையில் புதியதாக உருவாக உள்ள பானி புயலால் தமிழகத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள  ஃபானி புயல் இன்று இரவுக்குள் தீவிரமாகும் என்றும் ஆனால் நேரடியான பாதிப்பு எதுவும் தமிழகத்திற்கு இருக்காது என்றும் தெரிவித்து உள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்.

தற்போது பானி புயல் 1050 கி.மீ. தொலைவில் உள்ளது. புயல் தமிழக கரையை 300 கி.மீ. வரை நெருங்கி வர வாய்ப்பு உள்ளது. மே 1 ஆம் தேதிக்கு பின் புயல் திசைமாறி வடகிழக்கு நோக்கி நபாரும் என்பதால்  தமிழகத்திற்கு மிதமான மழைக்கே வாய்ப்பு என தெரிவித்து உள்ளார் 

ஒருவேளை தமிழக கடலோர பகுதியில் புயலை கடக்கும் தருணத்தில் தமிழகத்திற்கு நல்ல மழை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நேரடியான பாதிப்பு எதுவும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி கொடுத்தாலும், நல்ல மழை கிடைக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் சற்று விரக்தி அடைந்துள்ளனர். 

click me!