சைக்கிளிங் vs வாக்கிங் : எடை இழப்புக்கு எது பெஸ்ட்?

By Kalai Selvi  |  First Published Dec 26, 2024, 9:15 AM IST

Cycling vs Walking : சைக்கிளின் அல்லது வாக்கிங் இவை இரண்டில் எது உடல் எடையை குறைக்க சிறந்தது என்று இங்கு பார்க்கலாம்.


சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயிற்சி இவை இரண்டும் மக்களின் தினசரி பயணத்தின் முக்கிய அம்சமாகும். பொழுதுபோக்காகவோ அல்லது உடற்பயிற்சியாகவோ மாறிவிட்டது. தற்போது உட்கார்ந்த வாழ்க்கை முறையால் பெரும்பாலான மக்கள் முதலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். மேலும் சைக்கிளிங் மற்றும் நடைபயிற்சி இவை இரண்டையும் உடற்பயிற்சி முறைகளில் சேர்ப்பது சிறந்து என்றாலும், வேலை அல்லது வேலைக்காக பயணம் செய்வது போன்று தினசரி வழக்கத்தில் ஒரு பகுதியாக அவற்றை மாற்றுவது இன்னும் சிறந்ததாகும். உடலில் இவை இரண்டும் நேர்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், உடல் எடை இழப்புக்கு இவை இரண்டில் எது சிறந்தது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

சைக்கிள் ஓட்டுதல் மற்றும் வாக்கிங் நன்மைகள் :

Tap to resize

Latest Videos

undefined

சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைப்பயிற்சி செய்வது இவை இரண்டும் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. அதாவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், எடையைக் குறைக்க உதவும், சகிப்புத்தன்மை அதிகரிக்கும், மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கும்.

இதையும் படிங்க:   வாக்கிங்'ல 5 வகைகள் இருக்கு.. எந்த வகை கூடுதல் பலனளிக்கும் தெரியுமா? 

சைக்கிள் ஓட்டுதல் நன்மைகள்: 

சைக்கிள் ஓட்டுதலின் மூலம் உங்களுக்கு சகிப்புத்தன்மையை உருவாக்கும். இதயம் மற்றும் நுரையீரலுக்கு ரொம்பவே நல்லது. மேலும் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் தொடை எலும்புகளுக்கு நன்மை பயக்கும். 

நடைபயிற்சியின் நன்மைகள்:

நடைபயிற்சி உங்களது தசைகளை வலுப்படுத்தும். சொல்லப் போனால் இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். நீங்கள் முழு உடல் ஒர்க்கவுட்டை தேடுகிறீர்கள் என்றால், நடைப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நடைபயிற்சியின் போது நீங்கள் விறுவிறுப்பாக அல்லது அதிவேகத்தில் நடக்கும் போது உடலின் ஒட்டுமொத்த தசைகளும் செயல்பாட்டில் இருக்கும்.  

இதையும் படிங்க:  தினமும் 20 நிமிடங்கள் திறந்த வெளியில் வாக்கிங்.. உங்க உடலில்  அற்புதம் நிகழும்!

சைக்கிளிங் vs வாக்கிங் : எடை இழப்புக்கு எது சிறந்தது?

சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயிற்சி இவை இரண்டும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட சிறந்த பயிற்சி என்றாலும், உடல் எடையை குறைக்க உதவுவதில் இவை இரண்டிற்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக, நடைபயிற்சிமற்றும் சைக்கிள் ஓட்டிட்டல் இவை இரண்டும் கொழுப்பை இருப்பதில் பங்களிக்கும்.

பொதுவாக நாம் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் கலோரிகளை எரிப்பதில் நடைபயிற்சியை விட சில நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆம், ஆய்வு ஒன்றில் எடையை குறைக்க நடப்பதை விட சைக்கிள் ஓட்டுவது சிறந்தது என்று கண்டறிந்தனர். அதாவது, அதிக தீவிரம் கொண்ட சைக்கிள் ஓட்டுதல் குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது செயல்பாட்டின் போது அதிக கொழுப்பு இழப்புக்கு வழிவகுக்கும். 

அதே சமயம் தொடர்ந்து மற்றும் நீண்ட நேரம் செய்யும் நடைபயிற்சி கொழுப்பு இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். எனவே, சிறந்த முடிவுகளை பெற நீங்கள் இவை இரண்டிலும் எது வேண்டுமானாலும் செய்யலாம். எந்த வகையான உடற்பயிற்சியை நீங்கள் செய்தாலும் அதை பாதுகாப்பாக செய்ய உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமாக, எந்த ஒரு உடற்பயிற்சி அல்லது உணவு திட்டத்தை நீங்கள் தொடங்குவதற்கு முன் எப்போதுமே உங்களது மருத்துவரை அணுக வேண்டும்.

click me!