ஆண்மை குறைவுக்கு மிக சிறந்த 5 உணவு இதுதான்...! மாத்திரை மருந்தே தேவை இல்லை..!

By ezhil mozhiFirst Published Apr 4, 2019, 5:45 PM IST
Highlights

நாம் வாழும் இந்த இயந்திர வாழ்க்கையில் மாறி வரும் உணவு பழக்க வழக்கம், கலப்பிட உணவு, நல்ல உறக்கம் இல்லாமை, மன அழுத்தம் என தினந்தோறும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். 

நாம் வாழும் இந்த இயந்திர வாழ்க்கையில் மாறி வரும் உணவு பழக்க வழக்கம், கலப்பிட உணவு, நல்ல உறக்கம் இல்லாமை, மன அழுத்தம் என தினந்தோறும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். 

அதிலும் குறிப்பாக வாழ்க்கை முறை மாற்றத்தால் ஆண்களுக்கு ஒரு பொதுவான பிரச்னையாக ஆண்மை குறைவு வந்து விடுகிறது. இதற்காக பலரும் சில மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் இயற்கை முறையிலேயே சில உணவு பொருட்களை எடுத்துக்கொண்டால் இதற்கான நல்ல தீர்வை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பச்சை காய்கறிகள் மற்றும் பீட்ரூட்

பொதுவாகவே கீரை வகைகளில் இல்லாத சத்துக்களே கிடையாது. எனவே வாரத்திற்கு 2 முதல் 3 முறை வரை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக, பாலக்கீரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

இதில் இருக்கக்கூடிய நைட்ரேட்ஸ் ஆணுறுப்புக்கு செல்லக்கூடிய ரத்த நாளங்களை நன்கு விரிவடையச் செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. ரத்த ஓட்டம் அதிகரித்தால் ஆண்மை குறைவு பிரச்சனை நீங்கிவிடும்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் அதிகம் இருக்கக்கூடிய flavonoids செல்களுக்கு  புத்துணர்ச்சி கொடுத்து, தேவை இல்லாத டாக்சின்ஸ் வெளியேற்றும். மேலும் இது சிறந்த ஆன்டி ஆக்சிடண்டாக செயல்பட்டு உடலில் உள்ள  கொழுப்பை குறைத்து, ஆண்மையை அதிகரிக்க செய்யும்.

பிஸ்தா 

பிஸ்தாவில் உள்ள புரோட்டீன் ஆர்கினைன் ரத்த நாளங்களை நன்கு செய்லபட வைத்து, ரத்த ஓட்டகத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம், ஆண்மை குறைவு பிரச்சனை சரி செய்யப்படுகிறது.

தர்பூசணி 

தர்பூசணியில் உள்ள phytonutrients ரத்த நாளங்களுக்கு தேவையான சக்தியை கொடுத்து விறைப்பு தன்மையை அதிகரிக்க செய்கிறது. அது போன்றே இதில் 92 % தண்ணீர் மற்றும் மீதமுள்ள 8 % இதயத்திற்கும், தாம்பத்திய உறவு மேம்படவும் பேருதவியாக இருக்கும்.

தக்காளி 

தக்காளியில் உள்ள Lycopene ஆன்டி ஆக்சிடண்டாக செயல்பட்டு ஆண்மைக்கு மிக சிறந்த முறையில் உதவி புரியும். பிராஸ்டேட் நாளம் தொடர்பான அனைத்து பிரச்னையும் நீங்கி விடும்.

எனவே, நம் முன்னோர்கள் கூறியபடியே "உணவே மருந்து"... இதனை சரியாக புரிந்துகொண்ட செயல்பட்டால் கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் இருக்கும். 

click me!