கண் பார்வைக்கு உதவுற  'அரிசி' பத்தி தெரியுமா? இதை சாப்பிட்டால் எக்கச்சக்க நன்மைகள்!! 

By Kalai Selvi  |  First Published Dec 18, 2024, 11:02 AM IST

Millet Rice Benefits : நம்மூரில் பயன்படுத்தும் சில அரிசிகளில் கண் பார்வைக்கு உதவும் பீட்டா கரோட்டின் இருப்பதாக மருத்துவ சிவராமன் தெரிவித்துள்ளார். 


கண் பார்வை மேம்பட உணவுப் பொருட்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் வைட்டமின் 'ஏ' உள்ள உணவுகளை உண்ணும் போது கண்கள் ஆரோக்கியமாக இருக்கும் என நாம் அறிந்திருப்போம். அரிசி உணவு சாப்பிடுவதால் கூட கண் பார்வைக்கு பலன் கிடைப்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? மருத்துவர் சிவராமன் நமது ஊரில் பயன்படுத்தும் அரிசியில் கண் பார்வைக்கு உதவக்கூடிய பீட்டா கரோட்டின் இருப்பதாக தெரிவித்துள்ளார். டாக்டர் சிவராமன் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் இது குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். அவர் சொன்னவற்றில் சில விஷயங்களை இங்கு காணலாம்.

உணவே மருந்தாகும் போது பல நோய்களிலிருந்து தப்பி ஆரோக்கியமாக இருக்க முடியும். அதற்கு நம்முடைய உணவை சத்தாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் போதும்.  நம்முடைய உணவு முறை மாறும் போது அது உடலில் மாற்றங்களை கொண்டு வருகிறது. நல்ல உணவுகள் நல்ல மாற்றங்களையும், கெட்ட உணவுகள் உடலுக்கு கெடுதலையும் கொண்டு வருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

பொதுவாக நம்முடைய ஊர் சார்ந்த உணவுகளை உண்ணும் போது நோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைவு.  ஏனென்றால் நம்முடைய உடலமைப்பு நம் ஊரில் உள்ள தட்பவெப்ப நிலைகளை பொருத்து இருக்கும். அதற்கு தகுந்த உணவுகள் என்றால் அவை இங்கு விளையக் கூடிய உணவுகள் தான். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்களை வாங்கி பயன்படுத்தும் போது நம்முடைய உடல் அதை ஏற்றுக்கொள்ள தொடங்குகிறது. இந்த புள்ளியில் தான் நம்முடைய ஆரோக்கியமும் பாதிக்க ஆரம்பிக்கிறது.

இதையும் படிங்க:  இந்த பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் சிறு தானியங்களை சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா?

டாக்டர் சிவராமன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களில் வேதிப்பொருள்கள் கலந்திருப்பதாக கூறுகிறார். அதாவது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஓட்ஸ், திராட்சை, ஆரஞ்சு பழம் போன்றவை நீண்ட காலம் கெடாமல் இருப்பதற்காக அதில் பல வகையான ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதை உண்ணும் போது அதில் கலந்துள்ள இரசாயனங்களையும் சேர்த்துதான் மக்கள் உண்கிறார்கள். இவற்றை தவிர்ப்பது நல்லது. 

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நமது பாரம்பரிய உணவுகளை உண்பதே சிறந்தது. உதாரணமாக தினை அரிசியில் தான் அதிகளவில் பீட்டா கரோட்டின் காணப்படுகிறது. இது கண்பார்வையை நன்றாக வைத்திருக்க உதவும் என டாக்டர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார். ஆனால் மக்கள் இந்த அரிசியை வாங்கி பயன்படுத்துவது அரிதாக உள்ளது. 

பிற இறக்குமதி பொருள்களை, துரித உணவுகளை விரும்பும் மக்கள் நம் ஊரில் கிடைக்கும் சத்தான பொருட்களை கண்டு கொள்வதில்லை என்பதே கசப்பான உண்மை. நாள்தோறும் தினை அரிசியை சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  ஆனால் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது அதை உணவில் சேர்த்துக் கொள்வது கண் பார்வைக்கு மட்டும் இன்றி உடலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கும் உதவும். முருங்கைக்கீரை, பப்பாளி ஆகியவையும் கண் பார்வையை மேம்படுத்தும் என டாக்டர் சிவராமன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க:  நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகு சாப்பிடலாமா..?

தினை அரிசியின் மற்ற நன்மைகள்:

- தினை அரிசியில் வைட்டமின் பி காணப்படுகிறது. இது உங்களுடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

- தினை அரிசியை உண்பதால் மூளை செயல்பாடு நன்றாக இருக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். எலும்புகளை வலுவாக்கவும் தினை அரிசி உதவுகிறது. 

- சர்க்கரை நோயை குறைக்கும் தன்மை தினை அரிசிக்கு உள்ளது. சர்க்கரை நோயாளிகள் உண்ணலாம். 

- ஆண்களுடைய விந்தணுக்களை அதிகரிக்க தினை அரிசி உதவுகிறது. ஆண்மை குறைபாடு ஏற்படாமல் தடுக்க இந்த அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

click me!