Best Cooking Oil : சமையலுக்கு எந்த எண்ணெயை பயன்படுத்துவது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக காணலாம்.
நாட்டில் அதிகரித்து வரும் நோய்களுக்கு மத்தியில் மக்கள் தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் தாங்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களில் எது ஆரோக்கியத்தை தரும், எது ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க விரும்புகின்றனர். உடல் எடையை குறைப்பதிலும் அக்கறை காட்டிவருகின்றனர். இந்த சமயத்தில், சமையலில் எந்த எண்ணையை சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியத்தையும், எடை குறைப்பிலும் உதவும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எண்ணெயில் பல வகைகள் உள்ளன. கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய், பாமாயில் ஆகியவை மக்கள் பரவலாக பயன்படுத்தும் எண்ணெய்களாகும். இவை எண்ணெயாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. வெவ்வேறு சத்துக்களையும் கொண்டவை.
undefined
இதையும் படிங்க: தொப்பையை குறைக்க.. யாரும் சொல்லாத ரகசியம்... உதவும் 5 எண்ணெய்கள்!!
கடலை எண்ணெய்:
ரீபைண்ட் செய்யாத கடலை எண்ணெயில் பல சத்துகள் உள்ளன. உடலுக்கு தேவையான புரதச்சத்து, நல்ல கொழுப்புகள், நார்ச்சத்துகள் போன்றவை இந்த எண்ணெயில் உள்ளன. சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் ஆகிய அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. வைட்டமின் பி1, வைட்டமின் பி2, நியாசின், வைட்டமின் பி6, ஃபோலேட் ஆகியவையும் கடலை எண்ணெயில் உள்ளன. கூந்தல் வளர்ச்சி, புற்றுநோய் தடுப்பு, சரும பராமரிப்பு, நினைவாற்றல் மேம்பாடு, சர்க்கரை நோய் கட்டுப்பாடு, எடை குறைப்புக்கு இந்த எண்ணெய் உதவிகரமாக இருக்கும். செக்கில் ஆட்டிய எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் இந்த பயன்களை பெறலாம். ஆனால் அளவோடு தான் பயன்படுத்த வேண்டும்.
பாமாயில்:
தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் பாமாயிலில் குறிப்பிடத்தகுந்த தாதுக்கள் இல்லை. இந்த எண்ணெயில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ ஆகியவை உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சரும பராமரிப்பிற்கு உதவலாம். ஆனால் அதிகமான அளவு எடுத்துக் கொள்ளக் கூடாது. மற்ற விளைவுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இதில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கக் கூடிய நிறைவுற்ற கொழுப்பு தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வறுக்க, பொறிக்க பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: ஒருமுறை யூஸ் பண்ண சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா?
ரைஸ் பிரான் எண்ணெய்:
கொலஸ்ட்ரால் காணப்படாத எண்ணெய் ரைஸ் பிரான் ஆயில். இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் காணப்படுவதால் இதய ஆரோக்கியத்திற்கு உதவும். இந்த எண்ணெயில் எல்லா உணவுகளையும் சமைக்கலாம். வெப்ப அதிகரித்தாலும் அதன் ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.
தேங்காய் எண்ணெய்:
உடலுக்கு ஆற்றலை தரும் நடுத்தர டிரைகிளிசரைடுகள் தேங்காய் எண்ணெயில் உள்ளன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் ஆரோக்கியமாக இருந்தாலும் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் அளவாக பயன்படுத்தலாம்.
சோயா பீன்ஸ், சூரியகாந்தி ஆகிய எண்ணெய்களும் உடலுக்கு நன்மை செய்யக் கூடியவை தான். ஆனால் ரீபைண்ட் செய்யப்பட்ட எண்ணெய்கள் முழுபலனை தராது. ஒவ்வொருவரின் உணவு விருப்பம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப எண்ணெய் பயன்பாடு மாறலாம். ஆனால் எந்த எண்ணெயாக இருப்பினும் அளவாக எடுப்பதே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஒரே மாதிரியான எண்ணெய் பயன்படுத்தாமல் தேவைக்கேற்ப எண்ணெய் வகைகளை மாற்றி பயன்படுத்தினால் உடலுக்கு வெவ்வெறு வகை சத்துக்கள் கிடைக்கும்.